மாணவியை காரில் மோதிவிட்டு தப்பிச் சென்றவர்கள் கைது..!!

Read Time:3 Minute, 32 Second

unnamed (1)_18மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு –கல்முனை மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக நின்ற கல்லூரி மாணவி ஒருவரை கார் ஒன்றினால் மோதிவிட்டு தப்பிச் சென்ற கார் உரிமையாளரையும் அதில் பயணித்த இருவர்களையும் காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேற்படி விபத்திற்கு காரணமாக இருந்த குறித்த கார் சாரதியும் அதற்கு உதவியாக இருந்த இருவர்களும் மூதூர், கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை கைது செய்யும் போது இவர்களுடைய காரில் 2 அடி பழைய கத்தி மற்றும் 6 அடி கயிர் சுத்திய கம்பி இருந்தாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கை பொலிஸ் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 161 -1இன் பிரகாரம் ஒரு விபத்தை ஏற்படுத்தியவர் அவர் அது பற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது அப்பகுதி கிராம சேவகருக்கு அறிவிக்க வேண்டும்.
விபத்தினால் யாரும் காயப்பட்டிருந்தால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமெனவும் இவ் இரண்டு விடயங்களையும் இந்த விபத்தை ஏற்படுத்தியவர் செய்ய வில்லை எனவும் கூரிய ஆயுத்தை தனது வாகனத்தில் வைத்திருந்து மூன்று குற்றங்களுக்காக குறித்த கார் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சாரதி விபத்தை ஏற்படுத்திய பின்னர் அவருக்கு உடைந்தையாக இருந்த காரணத்தினாலும் காரில் பயணித்து இருவரையும் கைது செய்துள்ளதாகவும் இவர்களை இன்று நீதி மன்றத்தல் ஆஜர் செய்யவுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி குறிப்பட்டார்.

இவ் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவி காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய கார் தற்போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.ஆர்.எஸ்.கோனார தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் அஜீத் ரசிகர்கள் ஊனமுற்றோருக்கு உதவி (படங்கள்)…!!
Next post அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்…!!