யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிகளால் நடாத்தப்படும் கொடூரக் கொலைகள்..!!

Read Time:5 Minute, 25 Second

timthumb (1)யாழ் போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்கள், தாதியர்களது அசமந்தப் போக்கினால் பல உயிர்கள் காவு கொள்ளும் நிலை அண்மையில் ஏற்பட்டுள்ளது.மாரடைப்பால் சென்ற நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
இருந்து இரண்டாம் விடுதியில் அனுமதிக்கபட்டு 12 மணித்தியாலங்கள் வரை கதிரையிலேயே அமர்ந்திருந்திருக்கிறார்.அவருக்கு கட்டில் கொடுக்கபடவுமில்லை.

படுப்பதற்கு பாய் வசதிகள் கூட செய்துகொடுக்கப்படவில்லை.அங்கு படுப்பதற்கு இடமுமில்லை.அங்கே பணி புரிகின்ற தாதியர்கள் நோயாளிகள் மீது எரிந்து விழுவதும் மரியாதை குறைவாக கதைப்பதும் நோய்க்காரணமாக பயத்தோடு இருக்கின்ற நோயாளிக்கு உளவியல் ரீதியாக பாரிய தாகத்தை ஏற்படுத்துகிறது.

யாழ் போதனா வைத்தியசாலையின் இரண்டாம் இலக்க விடுதியானது வைத்தியர் பேரானந்தராஜாவிற்கு உரியது. இவர் தனியார் மருத்துவமனைகளிலும் பணி புரிவதனால் அங்கு வரும் நோயாளிகளையே போதனா வைத்தியசாலையிலும் கவனிக்கிறார் என்றும் மற்றைய நோயாளிகளை கவனிப்பதில்லை என்றும் நோயாளர் மத்தியில் பெரும் குற்றச்சாட்டு இருக்கின்றது.

இவரது கட்டுப்பாட்டில் இருக்கும்.இந்த விடுதியில் பணி புரியும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் வேண்டா வெறுப்பாக தமது கடமைகளை செய்வதும்,முகம் பார்த்து கடமைகளை செய்வதும்,நோயாளர்கள் மனம் நோக நடந்து கொள்வதும் இவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.மாறாக தெரியாது விட்டால் அவர் ஒரு விடுதியின் கட்டுப்பட்டாளராக இருக்க தகுதியில்லை.

வயதானவர்கள் சென்றால் ஒருவிதமான பார்வையும் மற்றவர்கள் சென்றால் வேறோருவிதமான பார்வையும் இங்கே செலுத்தப்படுகிறது என நோயாளர்களும் பராமரிப்பளர்களும் தெரிவிக்கின்றனர்.இந்த விடுதியின் வைத்தியர்கள் தாதியர்களின் அசமந்தப் போக்கினால் 01.11.2011 அன்று கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையை சேர்ந்த லீனஸ் பெர்ணடேற்றம்மா அவர்கள் மரணத்தை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

எண்பது வயதுகள் நிரம்பிய இவரை சரியான முறையில் கவனிக்காமலும் அனுமதிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் ஆகியும் எந்த ஒரு மருந்தும் கொடுக்கப்படாமையும் வைத்தியரால் ECG மற்றும் ECHO போன்றன எடுக்கும் படி பணித்தும் அதை தாதியர்களோ பொறுப்பானவர்களோ செய்யாதுவிட்டதனால் ஒரு தாயின் உயிர் பறிக்கபட்டிருகிறது

இது தொடர்பாக இறந்தவரின் மகன் லினஸ் எக்னேசஸ் ரோகன் (பிரதி அதிபர் யாழ் புனித அந்தோனியார் கல்லூரி ஊர்காவற்துறை) யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்திய மூர்த்தியிடம் எழுத்து வடிவிலான முறைப்பாடு ஒன்றை செய்திருக்கிறார்.

அவ் முறைப்பாட்டை விசாரிப்பதற்கு தனக்கு ஒரு வார காலம் தேவை எனவும் வார முடிவில் தங்களை அழைப்தாகவும் பணிப்பாளர் அம் முறைப்பாட்டிற்கு பதிலளிதிருக்கிறார்.இந்தச் சம்பவம் தொடர்பான விளைவுகள் அனைத்திற்கும் முழுப் பொறுப்பாளி யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் DR சத்திய மூர்த்தியே ஆவார்.

நோயாளர்கள் வைத்தியர்ளை கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்துப் பார்க்கும் நிலையை யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரியும் சில வைத்தியர்கள் தனியார் வைத்தியாசலைகளில் காசுக்காக மாரடித்து இயமனுக்கு முதற் படியில் வைத்துப் பார்க்கும் நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறன சிலரின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த வைத்திய சமூகமும் தலை குனிந்து நிற்கிறது.இனியேனும் தமது அசமந்தப் போக்கினால் ,தாதியர்களின் பாராபட்சங்களினால் உயிர்கள் காவு கொள்ளாது தடுப்பது வைத்திய சமூகத்தின் கடமையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீபத்திருநாளில் அநாதையான மூன்று பிள்ளைகளின் சோகக்கதை..!!
Next post முருங்கைகீரையின் பக்குவமான 12 மருத்துவகுறிப்புகள்…!!