இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் நீதிபதியாக நியமனம்..!!

Read Time:1 Minute, 20 Second

kalyani_kaul_001இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கல்யாணி கவுல் என்ற பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கல்யாணி கவுல்(வயது 54) இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

லண்டனில் உள்ள பிரபல கல்லூரியில் சட்டம் பயின்று பாரிஸ்ட்டர் பட்டம் பெற்ற இவர், கடந்த 1983ம் ஆண்டு வக்கீலாக தன்னை பதிவு செய்து கொண்டார்.

தொடர்ந்து 32 ஆண்டுகள் பல்வேறு குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதாடிய கல்யாணி, 2011ம் ஆண்டு அரசுதரப்பு வழக்கறிஞராக பதவியேற்றார்.

இந்நிலையில் Snaresbrook Crown நீதிமன்றத்தில் நீதிபதியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான வாய்ஸ் ஆப் அமெரிக்கா மற்றும் பி.பி.சி., வானொலியில் பணியாற்றிய பிரபல நிருபர்களான மகேந்திரா கவுல் – ரஜினி கவுல் தம்பதியரின் மகள் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையில் கொட்டி தீர்த்த மழை: பனையூரில் சுவர் இடிந்து 2 வயது பெண் குழந்தை பலி..!!
Next post குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: காரணம் என்ன?