ஈராக்கில் துப்பாக்கியால் சுட்டு 40 பேர் பலி
ஈராக்கில் உள்ள மக்முதியா நகரில் உள்ள மார்க்கெட்டில் கார் குண்டு வெடித்தது. அதே நேரத்தில் சில கார்கள் அங்கு வந்தன. அதில் ஆயுதங்களுடன் இருந்த சிலர் துப்பாக்கியால் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இதில் 40 பேர் பலியானார்கள். 30 பேர் காயம் அடைந்தனர்.
ஈராக் ராணுவம் அந்த இடத்தை சுற்றி வளைத்தது. வீடு, வீடாக சோதனை போட்டது. அப்போது 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.