வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ஜிசாட்-15 செயற்கைகோள்..!! (வீடியோ இணைப்பு)

Read Time:1 Minute, 21 Second

isro_003இஸ்ரோவின் நவீன தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-15, தென் அமெரிக்காவிலுள்ள பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றத்தை அறிந்து கொள்வதற்காக, ஜிசாட்-15 எனும் செயற்கைகோளை சுமார் 860 கோடி செலவில் இஸ்ரோ வடிவமைத்தது.

சுமார் 3,100 கிலோ எடை கொண்ட ஜிசாட்-15 செயற்கைகோளை, தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலுள்ள கொரு ஏவுதளத்திலிருந்து ஏரியன்-5 விஏ-227 எனும் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாட்டை இஸ்ரோ செய்துவந்தது.

இதற்கான கவுண்டவுன் தொடங்கப்பட்ட நிலையில், இன்று(11-11-15) அதிகாலை 3.04 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதனுடன் சவுதி அரேபியாவின் அராப்சாட் 6பி செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விண்கல் விழும் ஆபத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!!
Next post எவ்வித பாதுகாப்புமின்றி ஈபிள் கோபுரத்தில் ஏறி சாகசம் (வீடியோ இணைப்பு)