வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்: 9 பேர் பலி…. வீடியோ எடுத்து வெளியிட்ட பெண்..!!

Read Time:1 Minute, 59 Second

america_flight_002அமெரிக்காவில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானததில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
Hawker H25 என்ற சிறிய ரக ஜெட் விமானம் ஒகியோ மாகாணத்தில் உள்ள Akron Fulton என்ற சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது விமானநிலையத்தை நெருங்குவதற்கு முன்னால், இந்த விமானம் ஒகியோவில் உள்ள குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கியதில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், விரைவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர், இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 7 பயணிகள் உட்பட 2 விமானப்படை ஊழியர்களும் உயிரிழந்தனர்.

இந்த காட்சியை அருகில் இருந்த வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் ஜன்னல் வழியாக நின்றுகொண்டு வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒரு பெரிய குண்டுவெடித்தது போன்ற சத்தம் கேட்டது, விரைந்து சென்று ஜன்னல் வழியாக பார்த்த போது விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டேன்

அமெரிக்காவில் மூடுபனி அதிகமாக இருப்பதால் எதனையும் தெளிவாக காணமுடியவில்லை, வானிலை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்து என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமன்னாவின் இந்த ஆசை நிறைவேறுமா..!!
Next post ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வந்த “மேகக்கூட்டங்கள்”: அதிர்ச்சி தரும் வீடியோ..!!!