நாற்பது மூவாயிரம் தடவை பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்: தனது அவலம் தொடர்பில் மனம் திறக்கிறார்..!!

Read Time:3 Minute, 1 Second

1447325326_6434275_hirunews_carlasasபெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலிடமிருந்து தப்பித்த இளம்பெண்தான் 4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

மெக்சிகோவை சேர்ந்தகார்லா ஜெசின்டோஎன்ற அப்பெண் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் மனித கடத்தல் கும்பலிடம் சிக்கியதையும் அதனால் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளையும் விவரித்துள்ளார்.

அதன் மூலம் மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் கொடூர மனித கடத்தல்களின் கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கார்லா போன்று உலகில் 10 ஆயிரம் மெக்சிகன் பெண்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

கார்லா ஜெசின்டோதான் தனது 5 வயதில் தனது தயாரால் நிராகரிக்கப்பட்டதாகவும், அப்போது தனது உறவினர் ஒருவரால் பாலியல்துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறி உள்ளார். அதன் பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறியுள்ள அவர், ஒரு நாளைக்கு 30 ஆண்கள் வீதம் 4 ஆண்டுகள் , 43, 200 முறை பாலியல் வன்கொடுமைக்கு தான் இலக்கானதாகத் தெரிவித்துள்ளார்.

தனது 12 வயது வயதில் மனித கடத்தல் கும்பலால் குறிவைக்கப்பட்டு கடத்தப்பட்ட கர்லா ஜான்சின்டோ அந்தச் சம்பவம் குறித்து, சில நண்பர்களுக்காக நான் மெக்சிகோவின் சுரங்க ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது இனிப்பு பொருள் விற்பனை செய்யும் ஒரு சிறுவன், சிலர் எனக்கு இனிப்பு ஒன்றை பரிசாக கொடுக்க சொன்னதாகக் கூறி என்னிடம் அதைக் கொடுத்தான். 5 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு வயதானவர் காரில் நான் இருந்தேன்என்று தெரிவித்துள்ளார் கார்லா .

தற்போது 23 வயதாகும் கார்லா மனித கடத்தலுக்கு எதிராக ஒரு வெளிப்படையான போராளியாக மாறியுள்ளார். அதனால் தான் தனது சீரழிக்கப்பட்ட வாழ்க்கையினைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாசர் அரபாத்தின் இல்லம் நினைவு அருங்காட்சியகம் ஆகின்றது..!!
Next post நாயின் உலக சாதனை-வீடியோ இணைப்பு..!!