கருப்பின மாணவர்களை அடித்து விரட்டிய அப்பிள் கடை நிறுவன ஊழியர்களால் பரபரப்பு..!!(வீடியோ இணைப்பு)

Read Time:2 Minute, 9 Second

dined_black_001அவுஸ்திரேலியாவில் கருப்பின மாணவர்களுக்கு அப்பிள் நிறுவனத்தின் கடைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெல்போர்ன் நகரில் உள்ள அப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான கடைக்கு 15 வயதுள்ள கருப்பின மாணவர்கள் 6 பேர் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தடுத்துள்ளனர். மேலும், பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் அவர்களை வெளியேற்றியுள்ளனர்.

ஏன் எங்களுக்கு அனுமதி மறுக்கிறீர்கள் என்று அந்த மாணவர்கள் கேட்டதற்கு, ‘நீங்கள் கருப்பாக இருப்பதால், இங்கே இருக்கும் பொருள்களை திருடி சென்று விடுவீர்கள்’ என கடை ஊழியர் ஒருவர் பதிலளித்துள்ளார்.

நாங்கள் ஏன் திருடப் போகிறோம் என இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டபோது, ’இங்கே விவாவதத்துக்கு இடமில்லை. இங்கேயிருந்து உடனே வெளியே செல்லுங்கள்’ என்று கடை ஊழியர் கூறுகிறார்.

இதனை அக்கூட்டத்திலிருந்து இளைஞர் ஒருவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ 50,000க்கும் அதிகமனோர்களால் யூ-டியூப்பில் பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பிள் நிறுவனத்தின் இந்த இனப்பாகுபாடு குறித்து பல்வேறு இடங்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் தங்கள் கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களையும் சமமாகவே நடத்துகிறோம் என்று கூறியுள்ள அப்பிள் நிறுவனம், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாயின் உலக சாதனை-வீடியோ இணைப்பு..!!
Next post 5 வயது வளர்ப்பு மகனை கொடுமைப் படுத்திய தந்தை: உளவியல் சிகிச்சை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்..!!