நடிகை காவேரிக்கு மருத்துவ பரிசோதனை!!!

Read Time:3 Minute, 18 Second

kaveri1.jpgகணவன் செய்து கொள்ள இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி போலீசில் புகார் கொடுத்த நடிகைக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகையாக அறிமுகம் ஆனவர் காவேரி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ஒளிப்பதிவாளர் வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியதாகவும், அதில் தான் கர்ப்பம் அடைந்து இருப்பதாகவும், ஆனால் தனது கணவர் வைத்தி அவரது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், வைத்தீஸ்வரனை தேடி திருச்சி அருகே உள்ள கீரனூருக்கு சென்றனர். அங்கு வாசவி திருமண மண்டபத்தில் நடக்க இருந்த திருமணத்தை தடுத்தனர். அத்துடன் வைத்தீஸ்வரனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வர முயன்றனர். ஆனால் அதற்குள் திருச்சியில் ஐஜியை நேரில் சந்தித்து காவேரியின் புகார் பற்றி விளக்கமளிக்க வைத்தீஸ்வரன் சென்றார். அவரை பிடிக்க சென்னை போலீசார் திருச்சி ஐஜி அலுவலகம் செல்ல முயன்றனர். இதை தெரிந்து கொண்ட வைத்தீஸ்வரன் அங்கிருந்து மாயமானார். இதற்குள் மணப்பெண் சுப்புலட்சுமி மற்றும் அவரது தந்தை ஆனந்தகுமார் ஆகியோரிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மணமகளும், அவரது தந்தையும் திருமணத்திற்கு மறுத்துள்ளனர். இதனால் திருமணம் தடைபட்டது. மாயமான வைத்தீஸ்வரனை பிடிக்க உள்ளூர் போலீசாருடன் சென்னை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தீஸ்வரன் தான் காவேரியுடன் நட்புடன் மட்டுமே பழகியதாகவும், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் நடிகை காவேரி புகாரில் கூறியுள்ளது உண்மைதானா என்பதை கண்டறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், இன்றோ நாளையோ மருத்துவ பரிசோதனை செய்யப்படலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜப்பானில் வெளிநாட்டினர் அனைவரும் போட்டோ எடுக்கப்படுவார்கள்; தீவிரவாதத்தை தடுப்பதற்காக
Next post கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும் சாதனை!! பட்டியலில் முதல் இடம் பிடித்தார் வனிஷா!