66.11 சதவீத இந்திய குழந்தைகள் உடலில் அசாதாரண அளவுகளில் சர்க்கரை- அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு…!!

Read Time:1 Minute, 42 Second

0ae8ba8d-eb0d-4b13-8761-1d70f9125e25_S_secvpfநகரமயமாக்கல் மற்றும் தலைகீழ் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இந்திய குழந்தைகள் உடலில் அசாதாரண அளவுகளில் சர்க்கரை இருப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

எஸ்.ஆர்.எல். நோயியல் ஆய்வுக்கூடம் 3 ஆண்டுகளில் சுமார் 17 ஆயிரம் இந்திய குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 66.11 சதவீத குழந்தைகளின் உடலில் அசாதாரண அளவுகளில் சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 51.76 சதவீதம் ஆண் குழந்தைகள் ஆகும்.

சர்க்கரை நோய் சத்தமில்லாமல் பல லட்சம் பேரின் உயிரை காவு வாங்கும் நோயாக மாறியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவும் 2025-ம் ஆண்டில் 80 சதவீத சர்க்கரை நோயாளிகள் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், உலகம் முழுவதும் 1.5 மில்லியன் இறப்புகள் சர்க்கரை நோயால் ஏற்படுகிறது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக துரித உணவுகள் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை காரணமாக சர்க்கரை நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தஞ்சையில் நகை கடையில் கொள்ளை..!!
Next post ஆசிட் வீச்சில் ரஷ்ய இளம்பெண் படுகாயம்: காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்…!!