ஜனாதிபதி மைத்திரிபால 26ம் திகதி மோல்டா புறப்படுகிறார்..!!

Read Time:1 Minute, 39 Second

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 26 ஆம் திகதி மோல்டா நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

இலங்கையே தற்போது பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவப் பொறுப்பை வகித்து வருகிறது.

இம்முறை பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தும் மோல்டா நாட்டிடம் ஜனாதிபதி தலைமைத்துவ பொறுப்பை ஒப்படைக்க உள்ளார்.

மோல்டாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை தலைநகர் வெலேடாவில் நடைபெறவுள்ளது.

தெற்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடானான மோல்டா, பொதுநலவாய அமைப்பு நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நாடுகளில் ஒன்றாகும்.

மோல்டா விஜயத்தை முடித்து கொண்டு ஜனாதிபதி அங்கிருந்து பிரான்ஸ் செல்ல உள்ளார். பாரிஸில் நடைபெறவுள்ள உலக சுற்றாடல் மற்றும் காலநிலை பாதிப்புகள் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்ணாவிரதமிருந்த அரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில்..!!
Next post அரசியல் கைதிகளின் விடுதலை இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு பச்சைக் கொடியாகும்…!!