எந்தவொரு தமிழ் அரசியல் கைதிக்கும் இனி பிணை வழங்கப்பட மாட்டாது- சுவாமிநாதன் [படங்கள் இணைப்பு]

Read Time:1 Minute, 50 Second

12227761_456879184517314_2307067063671997944_nசிறையிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் இனி பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

மகஸின் சிறைச்சாலைக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுவரை 39 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர்,

எஞ்சியுள்ள கைதிகளில் 90 பேர் தமக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு கடிதமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம், இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு குறித்த 90 பேரும் கட்டம் கட்டமாக புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார்.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.12208461_456879291183970_1391311221850659966_n

33818139suwaminathan_mahasin_006a

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டமைப்பின் தலையீட்டையடுத்து கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது
Next post மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்த அறிக்கை இவ் வாரத்துக்குள்..!!