By 18 November 2015 0 Comments

நீளமான தலைமுடிதான் இளவரசியின் அடையாளமா?: குழந்தையின் கேள்விக்காக இடுப்பளவு முடியை வெட்டிக்கொண்ட நடிகை…!!

a614ff2d-0779-47c2-b533-8c744dce01f1_S_secvpfஅமெரிக்க நடிகை க்ளேர் போவனிடம், ‘காமிக் மற்றும் சினிமாக்களில் நீளமான தலைமுடியுடன் இளவரசி கதாப்பாத்திரங்கள் இருப்பதால் தான் என்றுமே இளவரசி ஆகமுடியாதோ?’ என புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சிறுமி வெகுளித்தனமாக கேட்டுள்ளார்.

இந்தக் கேள்வியால் மனமுடைந்த நடிகை க்ளேர், தனது இடுப்பளவு முடியை மிகவும் சின்னதாக வெட்டிக்கொண்டு இதன் காரணத்தையும் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தனது நான்கு வயதில் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், அந்த வேளையில், சிகிச்சையளிக்கும்போது தானும் முடியை இழந்து தன்னைப் போலவே வெவ்வேறு விதமான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தங்கி இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த தன்னைப் போன்ற மற்ற குழந்தைகளும் தலைமுடியை முற்றிலுமாக இழந்தோ, உடலுறுப்புக்களை இழந்தவர்களாகவோ இருந்தோம். ஆயினும், இந்தக் குறைபாடுகளை எவரும் எள்ளி நகையாடியதில்லை. அழகு என்பது முகத்திலோ, உருவத்திலோ இல்லை. அது இன்னும், ஆழமாய் நாம் எண்ணும் எண்ணங்களில் உள்ளது.

இந்த விஷயத்தை அனைவரது மனதிலும் பதிய வைக்கும் நோக்கத்திலேயே தனது நீளமான தலைமுடியை வெட்டியுள்ளதாக க்ளேர் குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam