ஈராக்கில் அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 2 வீரர்கள் பலி; 12 பேர் காயம்

Read Time:1 Minute, 59 Second

flugzeuge000241.gifஈராக்கில், தலைநகர் பாக்தாத்துக்கு அருகே உள்ள சல்மான் பாக் என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. தீவிரவாதிகள் தாக்கியதால் இது வீழ்த்தப்படவில்லை என்பது மட்டும் உறுதி என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினார்கள். இந்த ஹெலிகாப்டர் ராணுவ வீரர்களை ஈராக்கின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தின்போது ஹெலிகாப்டரில் எத்தனைபேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஈராக்கில் அமெரிக்க தாக்குதல் தொடங்கியது முதல், 70 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கின. ஈராக்கில் இதுவரை நடந்த போரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3,863 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 863 அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர். ஈராக்கில் இதுவரை நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்களில் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த விபத்து தான் உயிர்ப்பலியை அதிகம் வாங்கியது. 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் 17பேர் பலியானார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post “அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்” இலங்கைக்கு இந்தியா அறிவுரை
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…