By 18 November 2015 0 Comments

திரு.வி.க. நகரில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை…!!

717926c5-f28f-4d96-a460-9dc4cb6f2918_S_secvpfதிரு.வி.க. நகர் கே.சி. கார்டன் 3–வது தெருவில் சிவன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் மர்ம மனிதன் புகுந்து கோவில் உண்டியலை தூக்கிச் சென்றுவிட்டான். உண்டியலில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவில் நிர்வாகி வேதகிரி போலீசில் புகார் அளித்தார். இதே போல் இதே பகுதி 2–வது தெருவில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் நேற்று இரவு உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

அதில் ரூ.8 ஆயிரம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாகி சத்யா போலீசில் புகார் செய்தார். திரு.வி.க. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜவகர் நகர் நெடுஞ்சாலையில் டாக்டர் மணிகண்டன் நடத்தி வந்த வளர்ப்பு பிராணி மருந்து கடையிலும் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள நாய் பிஸ்கட், உணவு பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Post a Comment

Protected by WP Anti Spam