39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வெள்ளி போன்று, புதிய கிரகம் கண்டுபிடிப்பு…!!

Read Time:1 Minute, 33 Second

015d835b-afc6-4537-884a-e52834f68d01_S_secvpfபூமியை போன்று வாழத் தகுதியுடைய மேலும் ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். அதே போன்று தற்போது வெள்ளியை போன்ற மற்றொரு கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஸ்மித் சோனியின் மைய விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கார்போனி தலைமையிலான குழுவினர் இக்கிரகத்தை கண்டறிந்துள்ளனர்.

இதற்கு ஜி.ஜே.1132 பி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அதில் சிறிய அளவில் குட்டையாக ஒரு நட்சத்திரம் உள்ளது. இது சூரியனை விட 5 மடங்கு சிறியதாகும்.

சூரியனை போன்று சக்தியற்றதாகவும் உள்ளது. மற்ற கிரகங்களை விட குளிர்ச்சியானதாகவும், பாறைகளுடனும் உள்ளது. இந்த கிரகம் குறித்து விண்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

இது பூமியை விட 16 சதவீதம் பெரியது. பூமியில் இருப்பது போன்று அங்கும் புவி ஈர்ப்பு சக்தி உள்ளது. அந்த கிரகத்தில் ஒருவர் நின்றால் பூமியில் இருப்பதை விட 20 சதவீதம் எடை கூடுதலாக இருப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கத்தை காக்க ஸ்மார்ட்போன்களில் பெட்டைம் மோட்: மருத்துவர் கோரிக்கை…!!
Next post நீளமான தலைமுடிதான் இளவரசியின் அடையாளமா?: குழந்தையின் கேள்விக்காக இடுப்பளவு முடியை வெட்டிக்கொண்ட நடிகை…!!