புளொட் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளர் தலைமையிலான…

Read Time:3 Minute, 39 Second

PLOTE-COLOR LOGO2.jpgபுளொட் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளர் தலைமையிலான துாதுக்குழுவினரின் சர்வதேச பிரதிநதிகளுடனான சந்திப்புகள்…– புளொட் சர்வதேச பொறுப்பாளர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான துாதுக்குழுவினர் சுவிஸின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகள் திருமதி. லுயிஸ் ஆர்பர் தலைமையிலான அதிகாரிகளை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம், அங்கு இடம்பெற்றுவரும் மனிதஉரிமை மீறல்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ளனர்.

இதேபோல் புளொட் சர்வதேச பொறுப்பாளர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான துாதுக்குழுவினர் சுவிஸ்லாந்திற்கான வத்திக்கான் பிரதிநிதியான அருட்தந்தை சில்வானு தோமாஸியுடனான சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளனர். இதன்போது, இலங்கையில் சில ஆயர்கள் புலிகளுக்கு சார்பாக நடப்பது குறித்தும் இதனால் ஏனைய ஆயர்களுக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தி தொடர்பிலும் அருட்தந்தைக்கு விளக்கியுள்ளனர். அதுமாத்திரமன்றி மன்னார் பேசாலையிலுள்ள தேவாலயத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட கிரனைட் தாக்குதலில் 34ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்தது குறித்தும், பேசாலை, வங்காலை பகுதிகளில் மீனவப்படகுகள் எரியூட்டப்பட்டதுடன், மீன்வாடிகள் எரியூட்டப்பட்டது தொடர்பாகவும் புளொட் துாதுக்குழுவினர் விளக்கியுள்ளனர்.

புளொட் சர்வதேச துாதுக்குழுவினர் ஜெனீவாவிலுள்ள சர்வதேச மனிதாபிமான அமைப்பின் நிர்வாக இயக்குநர் டேவிட் பெத்ராசெக் அவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது அண்மைக்காலமாக இலங்கையில் இடம்பெற்றுவரும் மனிதப்படுகொலைகள், ஆட்கடத்தல்கள், பொதுமக்களின் பெயரைப் பயன்படுத்தி புலிகள் தாக்குதல்களை நடத்தி வருவது, மாற்றுக் கருத்துடையோரும், மாற்று இயக்க உறுப்பினர்களும் புலிகளால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.

இதேவேளை புளொட் சர்வதேச துாதுக்குழுவினர் சுவிசின் ஜெனீவாவில் வெளியாகும் LE TEMPS என்ற பிரபல்யம் வாய்ந்த பத்திரிகையின் ஆசியப் பிராந்தியப் பிரதிநிதிகளுடனான சந்திப்பையும் நடத்தியுள்ளனர். இதன்போது இலங்கையின் அரசியல் நிலவரம், புலிசார்பு ஊடகங்களின் செயற்பாடுகள், இலங்கையில் அண்மைக்காலமாக நடைபெறும் வன்செயல்கள், படுகொலைகள், மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து எடுத்துக் கூறியுள்ளனர்.

தகவல்:- புளொட் சர்வதேச ஒன்றியம்….
NEW-Ranjan.Plote--Vattikan.Empassador.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தோனேசியாவில் `சுனாமி’ தாக்குதலில் 306 பேர் பலி: கடலில் மூழ்கிய 160 பேர் கதி என்ன?
Next post தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் வயோதிபர் பலி! 4 படையினர் படுகாயம்.