உலகின் மூத்த இளம் தம்பதியரின் வயது தெரியுமா?
முதல் காதலின் கசப்பான பிரிவு, உலகை நாம் பார்க்கும் விதத்தையே மாற்றிப்போட்டுவிடும். இருபத்தைந்து வயதை தாண்டியும் காதல் கைகூடாமல் போனாலே திருமணத்திற்கான காலமே முடிந்துவிட்டது என்ற பயம் ஏற்படும். சில சமயங்களில் இது அவசர அவசரமாக நமது பார்வைகளிலிருந்து முற்றிலும் மாறுபடும் யாருடனோ திருமணம் நடக்கவும் காரணமாகும்.
பல சமயங்களில் நமது கனவுக் காதலரை/காதலியை சந்திக்காமலேயே வாழ்ந்து முடித்தும் விடுகின்றோம். இங்கிலாந்தின் ஈஸ்ட்பர்ன் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் கிர்பி(103) மற்றும் டோரீன் லக்கி(91) ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது வயதை ஊர்ஜிதப்படுத்த சுமார் ஐந்து மாதங்களை எடுத்துக்கொண்ட கின்னஸ் சமீபத்தில் உலகின் மிக மூத்த இளம் தம்பதியர் என இவர்களை அறிவித்துள்ளது.
திருமண நாளன்று இவர்கள் இருவரது வயதையும் கூட்டினால், மொத்தம் 194 ஆண்டும் 280 நாட்களும் வருகின்றது. இந்த ஜார்ஜ் தம்பதியர் இதற்கு முந்தைய ஜோடியின் 191 ஆண்டுகள் மற்றும் 126 நாட்களில் திருமணம் செய்த சாதனையை முறியடித்துள்ளதாக கின்னஸ் வாயிலாக தெரியவந்துள்ளது.
கடந்த 1988-ம் ஆண்டு முதல் ஜார்ஜும், டோரினும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating