அரபு இனத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்: வீடியோ பதிவு வெளியிட்டதால் பரபரப்பு…!!

Read Time:1 Minute, 40 Second

jokermask_arrest_002-615x349கனடாவில் முகமூடி அணிந்த மனிதர் ஒருவர் அரபு இனத்தவரை கொலை செய்ய இருப்பதாக அறிவித்து வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Montreal பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர், அரபு இனத்தவரை வாரம் ஒருவர் வீதம் கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள பொலிசார் Quebec பகுதியில் இருந்து அந்த மர்ம நபரை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் செய்திதொடர்பாளர் இதுகுறித்து தெரிவிக்கையில், இந்த சம்பவம் மிகவும் கண்டனத்துக்கு உரியது எனவும், இதுபோன்ற செயல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் பொதுமக்கள் கண்டிப்பாக அதன் பலனையும் கண்டிப்பாக பெற்றே தீருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ பதிவை இணையத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், மிரட்டல் விடுத்துள்ள அந்த நபர், குறிப்பிட்டவர்களை தலையில் சுட்டு கொலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசிய தொழில் அதிபர் தலை துண்டிப்பு: பிலிப்பைன்சில் தீவிரவாதிகள் அட்டூழியம்..!!
Next post 1000 ஆண்டுகள் பழைமையான சோழர் கால வெண்கலச் சிலை: இந்தியா கொண்டு வர நடவடிக்கை…!!