பாரிஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூறையாடப்பட்ட மசூதிக்கு நிதியுதவி செய்த அமெரிக்க சிறுவன்…!!

Read Time:1 Minute, 40 Second

336d9227-0014-418a-a4c7-3807c5a88fad_S_secvpfகடந்த வாரம் பாரிஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலால் 129 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரிலுள்ள மசூதி ஒன்று சூறையாடப்பட்டிருந்தது.

கடந்த திங்களன்று அந்த மசூதியை திறக்கச் சென்ற ஃபைசல் நயீம் மசூதியில் புனித நூலான குர்ஆன் கிழித்து வீசப்பட்டிருந்த நிலையைக் கண்டதும் கலங்கிப்போனார். இச்சம்பவம் பற்றி தெரிந்ததும் போலீசாரும், ஊடகத்தைச் சேர்ந்த பலரும் அங்கு கூடினர்.

இந்த கூட்டத்துக்கு இடையே ஏழு வயது ஜேக் ஸ்வான்சனும் அங்கு தனது அம்மா லோராவுடன் வந்திருந்தான். சூறையாடப்பட்ட மசூதியின் நிர்வாகி, ஃபைசலைச் சந்தித்து, சீரமைப்பு பணிகளுக்காக தனது சொந்த சேமிப்பாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த இருபது அமெரிக்க டாலர்களை வழங்கினான்.

இது வெறும் இருபது டாலர்களாக இருந்தாலும், ஜேக் வாழ்க்கையின் மொத்த சேமிப்புமே அதுதான். அதனை பெருந்தன்மையுடன் ஜேக் முன்வந்து வழங்கியதற்கு ஃபைசல் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?
Next post மலேசிய தொழில் அதிபர் தலை துண்டிப்பு: பிலிப்பைன்சில் தீவிரவாதிகள் அட்டூழியம்..!!