By 20 November 2015 0 Comments

முகம் மாற்று சத்திரசிகிச்சைக்குள்ளான முன்னாள் தீயணைப்பு வீரர் சிறப்பான முறையில் குணமடைகிறார்..!!

imagesஅமெ­ரிக்­காவில் தீ விபத்­தினால் முகம் முற்­றாக எரிந்த முன்னாள் தீய­ணைப்பு வீரர் ஒருவர் முழு­மை­யான முகம் மாற்று சத்­தி­ர­சி­கிச்­சைக்­குள்­ளாகி சிறப்­பாக குண­ம­டைந்து வரு­கிறார்.

மிசி­சிப்பி மாநி­லத்தைச் சேர்ந்த பட்றிக் ஹார்­டிசன் எனும் இவர், சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்டு 3 மாதங்­க­ளான நிலையில், முழு­மை­யாக குண­ம­டைந்­துள்­ள­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த வெற்­றி­க­ர­மான முகம் மாற்று சத்­தி­ர­சி­கிச்­சை­யா­னது மருத்­து­வத்­து­றையில் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

2001 ஆம் ஆண்டு எரிந்­து­கொண்­டி­ருந்த கட்­ட­ட மொன்றின் கூரைப் பகு­தி­யொன்று பட்றிக் ஹார்­டி­சனின் முகத்தில் விழுந்­ததால் அவரின் முக­மூடி வெப்பத்தால் உருகி, அவரின் முகத்தில் பெரும் தீக்­கா­யங்­களை ஏற்­ப­டுத்­தி­யது.

இதனால் பட்­றிக்கை அடை­யாளம் காண முடி­யா­த­ள­வுக்கு அவரின் முகம் அலங்­கோ­ல­மாக மாறி­யது.

இந்­நி­லையில் டாக்டர் றொட்­ரிகஸ், 2012 ஆம் ஆண்டு பட்­றிக்கை சந்­தித்­த ­போது, அவரின் முகத்தை மீண்டும் சாதா­ரண நிலைக்கு கொண்­டு­வ­ரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார்.

இதற்­காக இறந்த ஒரு­வரின் முகத்தின் மேல் பகு­தியை பற்றிக் ஹார்­டி­னுக்குப் பொருத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இச்­சத்­தி­ர­சி­கிச்­சைக்குப் பொருத்­த­மான முகம் ஒன்று தேவைப்­பட்­ட­துடன், அதை, அன்­ப­ளிப்­பாக பெற்­றுக் ­கொள்ள வேண்­டிய தேவையும் இருந்­தது.

இத்­த­கைய முகத்­திற்­காக காத்­தி­ருந்த மருத்­து­வர்­க­ளுக்கு, பொருத்­த­மான முகம் கிடைத்துள்­ள­தாக இரு தட­வைகள் தவ­றான தக­வல்­களும் கிடைத்­தன.

இறு­தியில் அமெ­ரிக்­காவின் புரூக்ளின் நகரைச் சேர்ந்த 26 வய­தான டேவிட் ரொட்போக் எனும் இளைஞர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்­த­தை­ய­டுத்து அவரின் முகத்தை அன்­ப­ளிப்­பாக வழங்க அவரின் குடும்­பத்­தினர் முன்­வந்­தனர்.

அதை­ய­டுத்து டேவிட் ரொட்­போக்கின் முகத்தை பட்றிக் ஹார்­டி­னுக்குப் பொருத்­து­வ­தற்கு மருத்­து­வர்கள் தீர்­மா­னித்­தனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நியூயோர்க் பல்­க­லைக்­க­ழ­கத்தின் லாங்கோன் மருத்­துவ நிலை­யத்தில் இச்­சத்­தி­ர­சி­கிச்சை நடை­பெற்­றது.

நூற்­றுக்கும் மேற்­பட்ட மருத்­துவ அதி­கா­ரிகள், உத்­தி­யோ­கத்­தர்­களைக் கொண்ட குழு­வினர் இரு குழுக்­க­ளாக பிரிந்து இச்­சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொண்­டனர்.

சுமார் 26 மணித்­தி­யா­லங்கள் இச்­சத்­தி­ர­சிகிச்சை நீடித்­தது.

இச்­சத்­தி­ர­சிகிச்சை வெற்­றி­ய­டை­வ­தற்கு 50 சத­வீத வாய்ப்பே உள்­ள­தாக கரு­தப்­பட்­ட­போ­திலும், பட்றிக் ஹார்­டிசன் சிறப்­பான வகையில் குண­ம­டைந்­துள்­ள­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

2005 ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த இஸ­பெல்லா டினோரி எனும் 38 வய­தான பெண்ணின் முகத்தை நாய் கடித்­ததால் அவ­ருக்கு பகு­தி­ய­ளவில் முகம் மாற்று சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டது.

அதுவே உலகின் முத­லா­வது முகம் மாற்று சத்­தி­ர­சி­கிச்­சை­யாகும். அச்­சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டதன் 10 ஆவது ஆண்டு நிறைவு வேளை­யி­லேயே பட்­றிக்­குக்கு முகம் மாற்று சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவில் முதல் தட­வை­யாக 2008 ஆம் ஆண்டு முகம் மாற்று சத்­தி­ர­ சி­கிச்சை செய்­யப்­பட்­டி­ருந்­தது.

சுமார் 30 பேருக்கு இத்­த­கயை சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­ட­போ­திலும் இவர்­களில் ஐவர், ஒவ்­வா­மையால் இறந்­து­விட்­டனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இரு பிள்­ளை­களின் தந்தையான பட்றிக் ஹார்டிசன் (41) தனது முகம் மாற்று சத்திரசிகிச்சை குறித்து கூறுகையில், “விபத்துக்குப் பின் என்னைக் காணும் சிறார்கள், பயந்து ஓடுவார்கள், இப்போது நான் சாதாரண மனிதனாக வாழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.Post a Comment

Protected by WP Anti Spam