By 26 November 2007

ரேஸ் கிளப்பில் விஜய், மாளவிகா!

atm011107_04.jpg21112007-thn12image2.jpgசினிமாக்காரர்கள், ரசிகர்கள் என எங்கு நோக்கினாலும் இந்தப் பட்டிமன்றம் தான் ஓடுகிறது. விஜய் இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை, அவர் எப்போதும் போல Mr.cool ஆகவே இருக்கிறார். விஜய்யின் புதிய படம் ‘குருவி’யின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை ரேஸ் கிளப்பில் இதன் படப்பிடிப்பு நடந்தது. விஜய்யுடன் சிக்கன உடையில் மாளவிகா கலந்து கொண்ட அதுவொரு பாடல் காட்சி.’கட்டுவிரியன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தாலும் ஒரு பாடலுக்கு ஆடுவதை மறக்கவில்லை மாளவிகா. ‘குருவி’ படத்திலும் விஜய்யுடன் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடுகிறார். அந்தப் பாடலைதான் ரேஸ் கிளப்பில் படமாக்கினார் இயக்குனர் தரணி. தொடர்ந்து ஒற்றைப் பாடலுக்கு ஆடினாலும் ‘வாளமீன்…’ ஹிட்டை வேறு பாடல்களால் நெருங்க முடிந்ததில்லை. அந்தக் குறையை ‘குருவி’ பாடல் தீர்த்து வைக்கும் என்றார் மாளவிகா. மாளவிகா சொல்வதை மறுக்கவா முடியும்!



Comments are closed.