100 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வைரம் தோண்டியெடுப்பு…!!

Read Time:1 Minute, 55 Second

18cb1a1c-7cd8-410f-b80a-f5533500a924_S_secvpf100 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வைரம் தோண்டியெடுக்கப்பட்டது. பல விதமான வைரங்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது அதிக தரம் வாய்ந்த வைரம் ஒன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

இது 1,111 காரட் தரம் கொண்டது. ஆப்பிரிக்காவின் போஸ்ட்ஸ்வானா சுரங்கத்தில் சமீபத்தில் தோண்டியெடுக்கப்பட்டது.

100 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்ட மிகப்பெரிய வைரமாக கருதப்படுகிறது. கடந்த 1905–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா சுரங்கத்தில் ‘குல்லினான்’ என்ற வைரம் வெட்டியெடுக்கப்பட்டது.

3,106 காரட் தரம் கொண்ட அந்த வைரம் பல துண்டுகளாக்கி பட்டை திட்டப்பட்டு இங்கிலாந்து மன்னர்களின் கிரீடங்களை அலங்கரித்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள இந்த வைரம் ‘குல்லினான்’ வைரத்துக்கு அடுத்தபடியாக 2–வது இடத்தில் உள்ளது.

இந்த தகவலை ‘லுகாரா வைர கார்ப்பரேசன்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. ஆனால் இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என வைர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வைர உற்பத்தியில் போட்ஸ்வானா உலகில் 2–வது இடத்தில் உள்ளது. இங்கு தற்போது தான் முறையாக மிகப்பெரிய தரம் வாய்ந்த வைரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேஸ் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு…!!
Next post தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை மையம்: கலெக்டர் திறந்து வைத்தார்…!!