இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர்: கைதிகளின் நலனில் அக்கறை

Read Time:1 Minute, 22 Second

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் சேம நலன்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இனங்கண்டு கொள்ளவென, 31 சிறைச்சாலைகளுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்குள்ள பிரச்சினைகளை அறிக்கைகளின் மூலம் தெரியப் படுத்தியுள்ளது. வட-கிழக்கு உள்ளிட்ட 31 சிறைச்சாலைகளுக்கு நேரடியாகச் சென்ற செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் 32 தடவைகள் சென்று 48 கைதிகளைத் தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளனர். சிறைக் கைதிகளினால் 356 தகவல்கள் உறவினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போதிலும் 216 தகவல்களே உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய தகவல்களை அறிவிக்க செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோடம்பாக்கத்தில் விபசாரம் ஆந்திர இளம்பெண்கள் மீட்பு, 2 புரோக்கர்கள் கைது
Next post இந்த வார ராசிபலன் (23.11.07 முதல் 29.11.07 வரை)