பிரித்தானியாவில் தடுப்புக் காவலில் இருந்த புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் பிணையில் விடுதலை

Read Time:1 Minute, 23 Second

grossb1.gifபிரித்தானிய அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாகத் தடுப்புக் காவலில் இருந்த விடுதலைப்புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் எனும் அருணாசலம் கிறிஸ்சாந்தகுமார் (வயது 50) எக்காரணம் கொண்டும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது உட்பட பல நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2000 இன் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்ததாகவும், இராணுவத் தளபாடங்களை கொள்வனவு செய்து கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கிங்க்ஸ்டன் கிரௌன் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் சாந்தனை பல நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவித்ததாக இலண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஓவியத்தில் லயித்து முத்தமிட்ட பெண் நீதிபதி : அபராதம் விதித்து தண்டித்ததால் பரபரப்பு
Next post உடல் பருமனால் பிரிட்டனில் 2000 பேர் வேலைஇழப்பு * நிதி பெறுவதற்காக நாடகம்?