By 24 November 2007

ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண், நடிகர் ஷாருக்கான்: இங்கிலாந்து பத்திரிகை கணிப்பு

லண்டனில் இருந்து `ஈஸ்ட்ரன் ஐ’ என்ற பத்திரிகை வெளியாகிறது. இப்பத்திரிகை, 2007-ம் ஆண்டுக்கான ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண் யார்? என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டு உள்ளது. அம்முடிவில், 42 வயதான இந்தி நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்து உள்ளார். இதன்மூலம் ஆசியாவின் செக்சியான நபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2-வது இடத்தை நடிகர் ஹிருத்திக் ரோஷனும், 3-வது இடத்தை ஜான் ஆபிரகாமும் பெற்றனர். கடந்த வருடம் இதே கருத்து கணிப்பில் முதலிடத்தில் இருந்த இந்தி நடிகர் அபிஷேக்பச்சன், இம்முறை 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.



Comments are closed.