30 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேலுக்கு உளவு பார்த்த அமெரிக்க அதிகாரி விடுதலை…!!

Read Time:2 Minute, 4 Second

ab18c623-e53d-4ebc-8b3d-ffce2c1d1916_S_secvpfஅமெரிக்காவில் கடற்படை உளவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் ஜோனாதன் பொல்லார்ட். இவர் இஸ்ரேலுக்கு உளவு வேலை பார்த்தார்.

வடக்கு கரோலினாவில் புட்னர் மத்திய சிறையில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி இஸ்ரேல் உளவாளியிடம் கொடுத்த போது சிக்கி கொண்டார். எனவே, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதை தொடர்ந்து சிறையில் 30 ஆண்டுகளாக அவர் தண்டனையை அனுபவித்து வந்தார்.

இதற்கிடையே தான் அமெரிக்க குடியுரிமையை துறக்க விரும்புவதாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு செல்ல விரும்புவதாகவும் அமெரிக்காவுக்கு திரும்பி வரமாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்னயாகு உளவாளி பொல்லார்டை விடுதலை செய்து தங்கள் நாட்டுக்கு அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதற்கு அமெரிக்க எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜோனாதன் பொல்லார்ட் 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் நேத்னயாகு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவரை அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து ஒபாமா அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 21 பேர் பலி…!!
Next post சீனாவில் 6 வயது சிறுவனுக்கு சிறுநீரக ஆபரேசன் செய்த ரோபோ…!!