இயக்குனரை அடித்த நடிகை…!!

Read Time:1 Minute, 52 Second

அநயெவஉா-ை-500x500தமிழில் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீனாட்சி. இப்படத்திற்கு பிறகு ‘டி.என்.07 ஏ.எல்.4777’, ‘ராஜாதி ராஜா’, ‘மந்திர புன்னகை’, ‘அகம் புறம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ‘வெள்ளக்கார துறை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இவர் தற்போது ‘நேர்முகம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படப்பிடிப்பின்போது படத்தின் உதவி இயக்குனரை மீனாட்சி தாக்கியுள்ளார். உடனே அவர் மயக்க நிலைக்கு சென்றிருக்கிறார். இதை பார்த்த படக்குழுவினர் உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்ததற்கு மன்னிப்பு கேட்கும் வரை அவர் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று சிறை பிடித்தனர்.

பின்னர் மீனாட்சி படப்பிடிப்பில் இவ்வாறு நடந்ததற்கு மிகவும் வருந்துகிறேன் என்று கூறி மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதன் பின்னரே படக்குழுவினர் சமாதானம் ஆகியிருக்கிறார்கள். படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்தது படக்குழுவினர் மற்றும் திரையுலத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஜிபுர் ரஹ்மான்…!!
Next post பார்ப்பவர்களை ஈர்க்கும் பிஞ்சு மழலையின் முதல் அனுபவம்..!!