இளம்பருவத்தினர் இணையதளங்களைப் பற்றி தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றனரா…?

Read Time:2 Minute, 18 Second

6d47bf63-3dd5-4709-acbc-8d02bfed4d49_S_secvpfஅதீத தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, 1999-ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு, இணையதளங்கள் உற்ற நண்பனாகிவிட்டன. 1999-ம் ஆண்டுக்குப்பின்னர் பிறந்த பெரும்பாலும் பணிக்குச் செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள், செல்போன்கள் மற்றும் கணினிகளுடனேயே தமது காலத்தைக் கழிக்கின்றனர்.

இங்கிலாந்தின் தொலைதொடர்பு ஆணையமான ‘ஆஃப்காம்’ 12 முதல் 15 வயதினரிடையே நடத்திய கணக்கெடுப்பில் ஐம்பது சதவிகித குழந்தைகள், தேடுபொறி அளிக்கும் பதில்களை ஆய்ந்து உண்மையானவற்றை அறிந்துகொள்ள முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

இதில் சுமார் இருபது சதவிகிதத்தினர் இணையதளங்களில் படிக்கும் அனைத்து தகவல்களையும் உண்மை என ஆணித்தரமாக நம்புவதாக தெரியவந்துள்ளது. எனினும், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என இவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

மேலும், வலைப்பூக்களில் எழுதுவோர் சிலர், குறிப்பிட்ட பொருட்களைப் பற்றி புகழ்ந்து எழுதுவதற்கு அந்த நிறுவனத்திடம் பணம் வாங்கிக்கொண்டு இவ்வாறு நடந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் இந்தத் தலைமுறையினர் உணர்ந்துகொண்டுள்ளதாகவும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நேரில் பழகுவதைக் காட்டிலும் இணையதளங்களில் பேசும்போது வித்தியாசமான அணுகுமுறையுடன் பலரும் நடந்துகொள்வதை இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற பத்தில் ஏழு இளம்பருவத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் ஆஃப்காம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கான், பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: வட இந்தியாவிலும் உணரப்பட்டது…!!
Next post திருமங்கலம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை…!!