இந்த வார ராசிபலன் (23.11.07 முதல் 29.11.07 வரை)

Read Time:13 Minute, 17 Second

astrology_ani1.gif1-mesam-1.gifமேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)
பொது: மகிழ்ச்சியான வாரமாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைந்து சமுதாயத்தில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்லுங்கள்.

பெண்களுக்கு: பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி சந்தோஷம் அடைவீர்கள். இல்லறத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகங்களில் இதுநாள் வரை இருந்து வந்த பணிச்சுமை நீங்கும். சக ஊழியர்கள் தங்களுக்கு உதவி செய்வார்கள். செய்யும் வேலைக்கு ஏற்ற ஊதியம் கண்டிப்பாக கிடைக்கும்.

2-resabam-2.gifரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)
பொது:
உறவினர்களிடம் கவனத்துடன் பழகவும். பணவரவு திருப்தியாக இருந்தாலும் செலவுகள் கையிருப்பை கரைக்கும். சிக்கனமாக இருந்து வருமானத்தை காப்பாற்றிக் கொள்ளவும்.
பெண்களுக்கு: பிள்ளைகளின் படிப்பில் கவனத்தை செலுத்துங்கள். குடும்பத்தில் கணவரிடம் நெருக்கம் அதிகமாகும். மன தைரியத்துடன் பல வேலைகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
வேலை பார்ப்போருக்கு: வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள்.

3-midunam-3.gifமிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பொது:
எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். பணவரவு பையை நிரப்பும்.
பெண்களுக்கு: கன்னிப் பெண்களுக்கு சுப காரியங்கள் நடக்கும். இல்லறத்தில் கணவருடன் சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அமைதியுடன் சென்றால் பிரச்சனையில்லை. உறவினர்களுடன் சுமூக உறவு வைத்துக் கொள்ளவும்.
வேலை பார்ப்போருக்கு: உத்தியோகத்தில் இருப்பவர்கள் இதுநாள் வரை சந்தித்து வந்த பிரச்சினைகள் தீர்ந்துவிடும். மேலதிகாரிகளின் ஆதரவால் சம்பள உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

4-kadagam-4.gifகடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
பொது:
இதுவரை இருந்த கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சியான சூழல் அமையும். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் தகுந்த ஆலோசனைகள் பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் உறவினர் வழியில் சற்று கவனத்துடன் நடந்து கொள்ளவும்.
பெண்களுக்கு: தொழிலில் உள்ள பெண்கள் அதிக பணவரவு காண்பீர்கள். நீங்கள் சொல்வதை வீட்டில் உள்ளவர்கள் கேட்டு நடப்பார்கள். குடும்பத்தை சிறப்பாக நிர்வகிப்பீர்கள். குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: சரியான நேரத்தில் வேலைகளை செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். மேலதிகாரிகள் தங்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள். சக ஊழியர்களிடம் சற்று கவனம் தேவை.

5-simmam-5.gifசிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொது:
பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். செய்யும் வேலைகளை சற்று கவனத்துடன் செய்தால் வெற்றி நிச்சயம். உறவினர் மற்றும் நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிறரின் மனம் புண்படாமல் பேசவும்.
பெண்களுக்கு: வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் தங்களின் அந்தஸ்து பலமடங்கு உயரும். கணவர் தங்களிடத்தில் அதிக அக்கறையும் நடந்து கொள்வார். தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு நீடிக்கும். தாங்கள் எதிர்பார்த்த இடங்களில் இடமாற்றம் வாங்கி செல்வீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை குறைந்து அமைதியான சூழல் நிலவும்.

6-kanni-6.gifகன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பொது:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அச்சத்தையும், குழப்பங்களையும் தவிர்த்து செயல்களில் தீவிரத்துடன் செயல்படுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.
பெண்களுக்கு: கணவர் பாசமழை பொழிவார். கணவர் வழி உறவினர்கள் தங்களை மதித்து நடப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.
வேலை பார்ப்போருக்கு: மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் கேட்டவுடன் நிறைவேறிவிடும். உங்களின் திறமையை மற்றவர்கள் பாராட்டுவார்கள்.

7-thulam-7.gifதுலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
பொது:
செய்யும் அனைத்துச் செயல்களிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மனதிலும், உடல் ஆரோக்கியத்திலும் புதிய தெம்பு பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.
பெண்களுக்கு: கன்னிப் பெண்கள் மனதை ஒருமிதத்துடன் வைத்துக் கொள்ளவும். தேவையில்லாமல் எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களை குறை சொல்லாமல் அன்புடன் வேலை வாங்குங்கள். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யாரையும் திட்டாதீர்கள். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்.

8-viruchagam-8.gifவிருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)
பொது:
உங்களுடைய அறிவாற்றலால் திட்டமிட்ட செயல்கள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வீர்கள். இதுவரை தடைபட்டு இருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். பொருளாதாரத்தில் அபார முன்னேற்றம் உண்டு.
பெண்களுக்கு: பெண்களுக்கு இல்லறத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். யாரிடமும் தேவையில்லாமல் பேசி வீண் வாக்குவாதங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: மேலதிகாரிகளிடம் சற்று விலகி இருத்தல் நல்லது. பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் தானாக தேடி வரும். பணியிடத்தில் இதுநாள் வரை இருந்த தடைகள் முற்றிலும் நீங்கும்.

9-dhanusu-9.gifதனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)
பொது:
குடும்பத்தில் ஒற்றுமையும், சந்தோஷமும் இருந்தாலும், அவ்வப்போது பண விரயம் ஏற்படும். நல்ல நண்பர்களின் நட்பு தொடரும். வெளியூர் பயணங்களால் நன்மை கிடைக்கும். மொத்தத்தில் சுமாரான வாரமாக அமையும்.
பெண்களுக்கு: குழந்தைகள் பெருமை தேடி தருவார்கள். கணவர் தங்களிடத்தில் சந்தோஷமாக இருப்பார். வேலைக்காக காத்திருக்கும் பெண்களுக்கு கடிதம் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும்.
வேலை பார்ப்போருக்கு: உத்தியோகத்தில் சிறிய பிரச்சனைகள் தோன்றி மறையும். மேலதிகாரிகள் தங்களிடம் மிகவும் அன்புடன் நடந்து கொள்வார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு அனைத்தும் விரைவில் கிடைக்கும்.

10-magaram-10.gifமகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொது:
திட்டமிட்ட செயல்களில் வெற்றி கிடைத்தாலும், மன உளைச்சல் உண்டாகும். இதனால் நெருங்கிய சிலருடன் விரோதம் ஏற்பட்டு, அதனால் பணவிரயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் எவரையும் நம்ப வேண்டாம்.
பெண்களுக்கு: பெற்றோர்களிடம் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். கணவர் தங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார். பெண் குழந்தைகளின் மேல் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
வேலை பார்ப்போருக்கு: பணியிடங்களில் உயரதிகாரிகள் கடிந்து கொள்வார்கள். சக ஊழியர்களின் ஆதரவினால் அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமையைக் கண்டு அலுவலகத்தில் பாராட்டுவார்கள்.

11-kumbam-11.gifகும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொது:
மகிழ்ச்சியான வாரமாக இருந்தாலும், இடையில் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும், நீங்கள் எதிர்பார்த்தபடி அனைத்தும் அமையும். பணவரவு திருப்தியாக இருக்கும்.
பெண்களுக்கு: இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களிடம் வீண் வாதங்கள் வேண்டாம். அனுசரித்து போனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.
வேலை பார்ப்போருக்கு: பணிபுரியும் இடங்களில் எல்லோரிடமும் சுமூகமாக பழகவும். வெளியிடங்களில் இருந்து வரும் புதிய பொறுப்புகளை தேடிச் செல்ல வேண்டாம். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

12-meenam-12.gifமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பொது:
குடும்பத்தில் குதூகலமும், மகிழ்ச்சியும் நீடிக்கும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணவரவு இருந்தாலும், எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
பெண்களுக்கு: இல்லறத்தில் கணவருடன் சற்று கருத்து வேறுபாடு இருப்பதால் அமைதியுடன் இருப்பதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். குழந்தைகள் நலனில் கவனம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: பணியிடத்தில் எந்த தடையுமில்லாமல் அனைத்து வேலைகளும் நிம்மதியாக முடியும். திறமையை கண்டு மேலதிகாரிகள் சம்பள உயர்வும், பதவி உயர்வும் வர பரிந்துரைப்பார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர்: கைதிகளின் நலனில் அக்கறை
Next post அஜீத் படத்தில் தீபிகா?