அதிசயம்: கரப்பான்பூச்சி, தவளை, களிமண் தண்ணீரால் 41 நாட்கள் உயிரோடிருந்த சுரங்கத்தொழிலாளர்கள்…!!

Read Time:2 Minute, 4 Second

d21c086e-5d89-4cd0-94a4-2a3e25282155_S_secvpfகிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள ஷின்யாகா பிராந்தியத்தில், ஒரு தங்கச் சுரங்கம் உள்ளது. இதில் கிடைக்கும் தங்கத்தின் அளவு குறைந்ததாலும், பாதுகாப்பு குறைவானதாலும், அந்த சுரங்கத்தை உள்ளூர் நிர்வாகம் மூடிவிட்டது. ஆனால், கடும் வறுமை காரணமாக தங்கத்திற்கு ஆசைப்பட்ட சிலர், சட்ட விரோதமாக, அந்த சுரங்கத்தை தோண்டும் பணியில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் சிக்கினர். ஆனால், அதிலிருந்து 14 பேர் தப்பிவிட்டனர். 6 பேர் சுரங்கத்தின் அடியில் எளிதில் மீட்கமுடியாத பகுதியில் சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், தங்க சுரங்கத்தில் புதையுண்ட, அந்த ஐந்து தொழிலாளர்கள், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிக்குப் பின், உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மிகவும் பலவீனமாக இருந்த அவர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்கள் உணவும் தண்ணீரும் இன்றி இவர்கள் உயிர்வாழ்வதை அதிசயம் என்றே மருத்துவர்கள் கூருகின்றனர்.

ஆனால், நிலச்சரிவில் சிக்கியவர்களோ, கரப்பான்பூச்சி, தவளை என்று சுரங்கத்தின் அடியில் கிடைத்த பூச்சிகளையும் களிமண் தரையில் இருந்த தண்ணீரை உறிஞ்சிக் குடித்தும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர். இவர்களுடன் சிக்கிய ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புயல்–வெள்ளம் பருவநிலை மாற்றத்தால் 6 லட்சம் பேர் பலி…!!
Next post வெள்ளத்திலிருந்து மனைவியைக் காத்த அன்புக்கணவன்: வைரல் வீடியோ…!!