முட்டைக்குள் மற்றொரு முட்டை…!!

Read Time:2 Minute, 0 Second

13422egg1பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் முட்­டை­யொன்றை உடைத்­த­போது அம்­முட்­டைக்குள் மற்­றொரு சிறிய முட்­டை­யொன்று இருந்­ததைக் கண்டு வியப்­ப­டைந்­துள்ளார்.

ஜேன் கீஸ்ட் எனும் இப்பெண் சமை­ய­லுக்­காக முட்­டை­யொன்றை உடைத்து சட்­டியில் ஊற்­றி­ய­போது, மற்­றொரு முட்டை உருண்டு ஓடி­யதாம்.

இது குறித்து தனது மனைவி ஜேன் தன்­னிடம் கூறி­ய­போது அவர் ஜோக்­காக அப்­படி கூறு­கிறார் என தான் எண்­ணி­ய­தாக கிறிஸ் கீஸ்ட் என்­பவர் தெரி­வித்­துள்ளார்.

பின்னர் இம்­முட்­டையை பார்த்­த­வுடன் தனது தொலை­பே­சி­யி­லி­ருந்த கெமரா மூலம் அதை தான் படம்­பி­டித்­துக்­கொண்­ட­தா­கவும் ஜேன் கீஸ்ட் தெரி­வித்­துள்ளார்.

60 வய­தான கிறிஸ் இது தொடர்­பாக மேலும் கூறு­கையில், “எமது வீட்டில் 19 கோழிகள் உள்­ளன. பொது­வாக நாம் முட்­டை­களை அய­ல­வர்­க­ளுக்கும் நண்­பர்­க­ளுக்கும் விற்­பனை செய்வோம்.

மேற்­படி பெரிய முட்­டையை கண்­ட­போது அது இரட்டைக் கருக்­களை கொண்­டி­ருக்­கலாம் என எண்­ணினேன்.

ஆனால், அதற்குள் மற்­றொரு முட்டை இருந்­த­தாக எனது மனைவி கூறி­ய­போது என்னால் நம்­பவே முடி­ய­வில்லை” எனத் தெரி­வித்­துள்ளார்.

அச்­சி­றிய முட்­டைக்குள் மஞ்சள் கரு இருக்கவில்லை எனவும் வெள்ளைக்கரு மாத்திரமே இருந்ததாகவும் இத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருத்துவர்களின் அலட்சியம்: ஆண்டுக்கு 37,000 பேர் உயிரிழக்கும் அவலம்…!!
Next post 4000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்த நாய்…!!