பிரசவத்துக்காக வைத்தியசாலையில் இருந்த நிலையில் பல்கலைக்கழக பரீட்சை எழுதிய யுவதி…!!

Read Time:3 Minute, 59 Second

1344512219570_10153188917676643_8892702011278252066_nஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் பிர­ச­வத்­துக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே இணை­யத்­தளம் ஊடக தனது பல்­க­லைக்­க­ழக பரீட்­சை­யையும் எழு­தி­யுள்ளார்.

ஜோர்­ஜியா மாநி­லத்தைச் சேர்ந்த 21 வய­தான டொமிட்ரைஸ் கொலின்ஸ் எனும் இந்த யுவதி மிடில் ஜோர்­ஜியா மாநில பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டு வந்தார்.

கர்ப்­பி­ணி­யாக இருந்த அவ­ருக்கு உரிய திக­திக்கு ஒரு வாரத்­துக்கு முன்­பா­கவே பிர­சவ வலி ஏற்­பட்­டதால் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் அவர் அனு­ம­திக்­கப்­பட்டார்.

கடந்த 12 ஆம் திகதி அதி­கா­லையில் 1 மணி­ய­ளவில் அவரின் பனிக்­குடம் உடைந்­தது.

ஆனால், அன்­றைய தினம் காலை 8 மணிக்கு அவ­ருக்குத் தனது பட்­டப்­ப­டிப்­புக்­கான உள­வியல் பாட பரீட்­சை­யொன்றும் இருந்­தது.

பிர­சவம் கார­ண­மாக பரீட்­சையை ஒத்­தி­வைப்­ப­தற்கு அவர் விரும்­ப­வில்லை.

இதனால், வைத்­தி­ய­சாலை கட்­டிலில் இருந்த நிலை­யி­லேயே இணை­யத்­தளம் ஊடாக மேற்­படி பரீட்­சை­யையும் எழு­தினார் டொமிட்ரைஸ் கொலின்ஸ்.

இப்­ப­ரீட்­சையில் விடை எழு­து­வ­தற்கு இரு மணித்­தி­யா­லங்கள் அவ­காசம் வழங்­கப்­படும்.

டொமிட்ரைஸ் ஒன்­றரை மணித்­தி­யா­லங்­களில் விடை­களை எழுதி முடித்தார்.

இப்­ப­ரீட்­சையில் அவ­ருக்கு பி சித்தி கிடைத்­துள்­ள­தாக தெரி­விக்ப்­ப­டு­கி­றது.

இதன்­போது அவரின் சகோ­தரி ஸெனல் சப்மென் பிடித்த பட­மொன்று இணை­யத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்டு 15,000 இற்கு அதி­க­மான தடவை பகி­ர­ப்­பட்­டுள்­ளது.

சில மணித்­தி­யா­லங்­களின் பின் பெண் குழந்­தை­யொன்றை பிர­ச­வித்தார் டொமிட்ரைஸ் கொலின்ஸ்.

“பிர­சவம் கார­ண­மாக பரீட்­சையை தவிர்க்க நான் விரும்­ப­வில்லை. இது குறித்து எனது ஆசி­ரி­ய­ருக்கு மின்­னஞ்­சலில் தெரி­வித்து நான் பரீட்சை எழுத விரும்­பு­வ­தாக கூறினேன்.

கடும் வலி­யையும் பொறுத்­துக்­கொண்டு நான் இப்­ப­ரீட்­சையை எழு­தினேன்” என கொலின்ஸ் கூறினார்.

“நான் பரீட்சை எழு­தும்­போது எனது சகோ­தரி ஷெனல் மேற்­படி புகைப்­ப­டத்தை பிடித்த விடயம் பிர­ச­வத்­துக்குப் பின்­னர்தான் எனக்குத் தெரி­ய­வந்­தது.

நான் எனது தொலை­பே­சியை பார்த்துக்­கொண்­டி­ருந்­த­போது, இணை­யத்தில் ஷெனல் வெளி­யிட்டு என்னை “டெக்” செய்த புகைப்­படம் பலரால் லைக் செய்­யப்­பட்­டி­ருந்­ததை கண்டேன்.

இந்தப் புகைப்­படம் இந்­த­ளவு பரவும் என ஷெனல் எண்ணியிருக்கவில்லை” எனவும் டொமிட்ரைஸ் கொலின்ஸ் கூறினார்.

அவர் 2015 ஆம் ஆண்டு குற்றவியல் நீதித்துறையில் பட்டம் பெறவுள்ளார். தான் தடய அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்ப்பவர்களை ஈர்க்கும் பிஞ்சு மழலையின் முதல் அனுபவம்..!!
Next post மதுபான விடுதிக்கு வெளியே அரை நிர்வாண கோலத்தில் ஆபாச நடனமாடிய பெண்கள்…!!