இலத்திரனியல் சிகரெட் வெடித்ததால் இளைஞனின் கழுத்தில் முறிவு…!!

Read Time:1 Minute, 38 Second

13441cig24n-25அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் புகைத்துக்கொண்டிருந்த ஈ சிகரெட் எனும் இலத்திரனியல் சிகரெட் வெடித்ததால் அவரின் கழுத்து உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 வயதான கோர்டெரோ எனும் இந்நபர், கடந்த வெள்ளிக்கிழமை ஈ சிகரெட் ஒன்றை புகைத்துக்கொண்டிருந்தபோது அது திடீரென வெடித்தது.

இதனால் கோர்டெரோவின் வாய் எரிந்ததுடன் அவர் பற்களும் உடைந்தன. அவரின் கழுத்திலும் முறிவு ஏற்பட்டது என கோர்டெரோவின் சகோதரி கொலேசியா போர்ட்டர் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கோர்டெரோவுக்கு கழுத்தில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி ஈ சிகரெட் வெடித்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. கோர்டெரோ ஏறத்தாழ பக்கவாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. “அவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்தது.

இவ்வாறான சம்பவங்களில் பலர் அவயங்களை இழந்துள்ளனர் எனவும் கொலேசியா போர்ட்டர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபான விடுதிக்கு வெளியே அரை நிர்வாண கோலத்தில் ஆபாச நடனமாடிய பெண்கள்…!!
Next post குழந்தைகளுக்கான தவழும் போட்டி…!!