தங்க சாக்லேட் சாப்பிட ஆசையா?

Read Time:2 Minute, 0 Second

Kit-Kat2-500x500இங்கிலாந்தின் பிரபல உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லேயின் கிட் கேட் சாக்லேட்களை அதற்குரிய அனுமதிபெற்று ஜப்பானில் தயாரிக்கும் ஒரு நிறுவனம், 24 கேரட் சொக்கத்தங்கம் கலந்த புதியவகை கிட் கேட் சாக்லேட்களை அடுத்த மாத இறுதியில் விற்பனை செய்ய உள்ளது.

இந்த வகையில் வெறும் ஐந்நூறு தங்க சாக்லேட்களே தயாரிக்கப்பட உள்ளது. இந்த ‘கோல்ட் கிட் கேட்’ சாக்லேட் அனைவரும் உண்ணக்கூடிய வகையில் பாதுகாப்பான உணவுத்தரச் சான்றுடன் தயாராகியுள்ளது என நெஸ்ட்லே நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட வகை கிட் கேட் சாக்லேட்களை அறிமுகப்படுத்தும் விதமாக ‘சாக்லேட்டரி மெம்பர்ஷிப்’ திட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளருக்கு உண்ணும் வகையிலான சொக்கத்தங்கம் கலந்த கிட் கேட் சாக்லேட்டுடன், உண்ண முடியாத – வெறும் பார்வைக்கு வைக்கக்கூடிய ’24 கேரட் தங்க கிட் கேட்’களும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

தங்க சரிகையால் மேல்பூச்சு செய்யப்பட்ட இந்தக் கிட் கேட் சாக்லேட்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது யென்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து அறுபது ரூபாய்க்கு) விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்திரி மால்டா நோக்கி பயணம்…!!
Next post மீன்களுக்கும் காய்ச்சல் வரும்: ஆய்வில் தகவல்…!!