தொடரும் விபத்துகள்: ஆண்களே இல்லாத கிராமம்…!!

Read Time:4 Minute, 6 Second

widow_village_002நெடுஞ்சாலைகள் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் தான் பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு கிராமத்தையே சீர்குலைத்த நெடுஞ்சாலை பற்றி கேள்விபட்டதுண்டா?
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகாபப்நகர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமம் தான் பெத்தகுண்டா. விபத்துக்களுக்கு பெயர் போன தேசிய நெடுஞ்சாலை எண் 44 செல்லும் வழியில் தான் இந்த கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் பலரும் இந்த நெடுஞ்சாலையை கடக்கும் போது வாகனம் போது மரணமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக இந்த கிராமத்தை விதவைகளின் கிராமம் என்றே பலரும் அழைக்கின்றனர்.

சுமார் 35 குடும்பங்கள் உள்ள இந்த கிராமத்தில் தற்போது ஒரே ஒர் ஆண் மட்டுமே உயிருடன் உள்ளார்.

37 ஆண்கள் வரை விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதுவரை இந்த சாலையில் 80க்கும் மேற்பட்டோர் விபத்தினால் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேலும் வாரத்துக்கு 2 அல்லது 3 விபத்துகளாவது இந்த நெடுஞ்சாலையில் நிகழ்வதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான விபத்துகள் பெத்தகுண்டா கிராமும் நெடுஞ்சாலையும் சந்திக்கும் பகுதியில் நிகழ்கின்றன என்றும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் பெண்கள் இறந்திருந்தாலும் ஆண்களே அதிக அளவில் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் விதவைகளாக உள்ளனர்.

ஒரு வித சாபத்தினால் தான் இந்த விபத்துகள் ஏற்படுவதாக இந்த கிராமத்தை சேர்ந்த பலரும் கருதுகின்றனர்.

எனினும் உண்மையான காரணம் குறித்து ஆராயும்போது வேறு விதமாக கூறப்படுகிறது.

அதாவது இந்த கிராமத்தினர் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக நெடுஞ்சாலைக்கு அந்த பக்கத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி பலியாகின்றனர் என்று கூறப்படுகிறது.

மது பழக்கம் மற்றும் கல்வி அறிவு இல்லாமை ஆகியவையும் விபத்துக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர், தொடர் விபத்துகளால் அதிக அளவு பலி ஏற்படுவதாக இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

பின்னர் சாலையை கடக்க முயன்றபோது அவரும் விபத்தில் சிக்கி பலியானார். இதன் காரணமாகவே இந்த கிராமத்தினர் சாலையை கடக்கவே அஞ்சுகின்றனர்.

மாதத்தின் இரண்டு முறை மட்டுமே இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சாலையை கடக்கின்றனர்.

விதவைகள் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஒரு முறையும் மீண்டும் கிராமத்துக்கு செல்வதற்காக மறுமுறையும் மட்டுமே சாலையை கடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே அதிக வெப்பமான ஆண்டு 2015: காலநிலை அமைப்பு தகவல்…!!
Next post ரஷ்யாவை தொடரும் சோகம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலி..!!