ஒரு ஜிகாதியை திருமணம் செய்யாதே மகளே: ஐ.எஸ். ஆதரவு ரஷ்ய இளம் பெண்ணின் தாயார் உருக்கம்…!!
ஜிகாதியை திருமண செய்ய நினைத்த தன் மகளை தடுக்க எவ்வளவோ முயன்றதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்ட ரஷ்ய இளம் பெண்ணின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ஃபாடிமி ட்ஜர்பரோவா(20) என்ற ரஷ்ய இளம் பெண் பாரிஸ் தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்டிருந்தார். சிரியாவில் ரஷ்யா வான்வெளி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை எட்டியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த அந்த இளம் பெண் ஃபாடிமி சிரியா சென்று ஒரு ஜிகாதியை திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் தாயார் ஷக்லா போச்கர்யோவா(41) கூறுகையில், ஒரு அசுரனுக்காக பெண்ணை பெற்றுள்ளேன் என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய மகளை தடுத்து நிறுத்த சங்கிலியால் பிணைத்து வைத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை செய்ததாக கூறினார். இருப்பினும் ஃபாடிமி தப்பித்து சிரியா சென்று ஜிகாதி ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.
Average Rating