திருமண நாளை மீண்டும் உருவாக்கிய 98 வயது சீனத் தம்பதி…!!
சீனாவின் சிறந்த காதல் ஜோடியாக அறியப்படும் காவ் யூஹுவா மற்றும் வேங் தேயி தம்பதியருக்கு திருமணமாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதைக் கொண்டாட விரும்பிய இந்த காதல் ஜோடி திருமணத்தன்று படமெடுத்த அதே இடத்தில் மீண்டும் திருமண உடையில் படமெடுத்துக்கொண்டனர்.
சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த இந்த ஜோடி இரண்டாம் உலகப் போரின்போது, பிரிய நேர்ந்தது. சீனா-பர்மா-இந்தியா எல்லையில் காவ், மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். போருக்கு இடையிலும் காதலை கடிதங்கள் மூலம் இந்த ஜோடி பகிர்ந்துகொண்டது.
பின்னர் 1945-ம் ஆண்டு சாங்கிங் நகரத்தில் உள்ள ஒரு பூங்காவில் இவர்களது காதல், திருமணத்தில் இணைந்தது. இதேப் பகுதியில் தமது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பதைப்போலவே மீண்டும் உடையலங்காரத்துடன் படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நீண்ட இனிமையான உறவு இத்தனைக் காலமாக தொடர்வதற்கு ஒருவரையொருவர் அன்புடன் கவனித்துக் கொள்வதுதான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர். தற்போது 98 வயதை எட்டியிருக்கும் இந்தத் தம்பதி தமது நூறாவது வயதிலும் இந்தப் பூங்காவுக்கு வர விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
Average Rating