செக்சை விட ஷாப்பிங் செல்வதில் பிரிட்டன் பெண்களுக்கு அதிக ஆர்வம்

Read Time:3 Minute, 59 Second

பிரிட்டன் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் செக்சில் ஈடுபடுவதைவிட ஷாப்பிங் செல்வதில் தான் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். பத்தில் நான்கு பெண்கள் இதுபோன்ற கருத்தை கொண்டுள்ளார். “பர்ஸ்ட் மேக்சின்’ என்ற பத்திரிகை சார்பில் பிரிட்டன் பெண்களிடம் உள்ள செக்ஸ் ஆர்வம், குடும்ப வாழ்க்கை ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கிடைத்த தகவல்கள் வருமாறு: செக்சில் ஈடுபடுவதை விட ஷாப்பிங் செல்வதே பிடித்தமானது என பத்து பெண்களில் நான்கு பேர் கருத்து தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனவர்களில் பாதி பெண்கள் கணவர் துணையின்றி வாழ முடியும் என கூறி வருகின்றனர். எனினும், திருமணம் முடிந்த பெண்களில் 72 சதவீதம் பேர் இன்னமும் தங்களின் கணவரை மயக்கும் வகையிலேயே உள்ளனர். பத்தில் ஏழு பெண்கள் மீது அவர்களின் கணவர்கள் செக்ஸ் ஆர்வம் கொண்டவராக உள்ளனர். திருமணம் முடிந்த முதல் இரவில் செக்ஸ் வைத்து கொண்டது இல்லை என்று திருமணமான பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தெரிவித்துள்ளனர். ஒருமித்த தாம்பத்தியம் என்பது மறைந்து போகும் விஷயமாக ஆகி வருகிறது. 45 வயது முதல் 54 வயது வரை உள்ள பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பத்தில் ஐந்து பெண்கள் இரண்டாவது திருமணம் செய்தவர்கள். இதில், மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், திருமணம் முடிந்த பத்து ஆண்டுகளுக்குள் அந்த உறவை துண்டித்து கொண்டவர்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 37 சதவீதம் பேர் செக்ஸ் அனுபவம் இல்லாத திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், பாதி எண்ணிக்கை பெண்கள் திருமணம் ஆகி இருபது ஆண்டுகளை கடந்தவர்கள். ஆய்வில் உட்படுத்தப்பட்ட பெண்களில் 37 சதவீதம் பேர் வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தான் செக்ஸ் வைத்து கொள்கின்றனர். சிலருக்கு எத்தனை நாட்களுக்கு செக்ஸ் வைத்து கொண்டோம் என்ற நினைப்பு இருப்பதே இல்லை. பெண்களில் பலருக்கு குழந்தை பிறந்த பிறகு செக்சில் ஆர்வம் குறைந்து விடுகிறது. இவ்வாறு ஆய்வில் தகவல்கள் கிடைத்துள்ளன. பெண்களுக்கு செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் இருப்பது ஆபத்தான போக்கு என மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அன்பை தெரிவிக்கும் போக்கில் மிகவும் ஆரோக்கியமான விஷயம் தான் செக்ஸ். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கணவர் அல்லது மனைவியை திருப்திப்படுத்தும் விஷயம். செக்சே இல்லாமல் வாழ்வது என்பது ஆபத்தானது. இதனால், உறவில் இடைவெளி ஏற்படும். கோபம் உண்டாகும். ஒரு காலத்தில் காதல் உணர்வுடன் வாழ்ந்து வந்தவர்கள் பின்னர் சகோதர மனப்பான்மையுடன் வாழ்வது போன்றது இது என்று மன நல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பனிப்பாறையில் மோதி சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது; 150 பேர் உயிர் தப்பினர்
Next post பிரிட்டிஷ் ராணி திருமணம் குறித்து தவறான தகவல்