காதலியை கொலை செய்து சூட்கேசில் மறைத்த காதலன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

Read Time:3 Minute, 22 Second

lovermurder_002பிரித்தானிய நாட்டில் காதலியை கொடூரமான சித்ரவதை மூலம் கொலை செய்து சூட்கேசில் மறைத்து வைத்த காதலனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு லண்டனுக்கு அருகில் உள்ள Harlesden என்ற நகரில் Tomasz Kocik(38) மற்றும் Marta Ligman(23) என்ற காதல் ஜோடி வசித்து வந்துள்ளனர்.

போலந்து நாட்டிற்கு சென்றபோது ஒன்லைன் மூலம் இருவரும் பழகி காதலர்கள் ஆன பின்னர், பிரித்தானியா நாட்டிற்கு திரும்பி வந்து வசித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது.

இதே ஆண்டு மே மாதம் 1ம் திகதி இருவருக்கும் மோதல் ஏற்பட, காதலியை அந்த நபர் கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்.

பின்னர், மயங்கிய நிலையில் இருந்தபோது அவரை ஒரு நீளமான சூட்கேசில் அடைத்து வைத்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சாலை வழியாக சூட்கேஸ் பெட்டியை இழுத்துக்கொண்டு போனது, அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

மேலும், சிறிது தூரம் சென்றதுக்கு பிறகு அங்குள்ள கால்வாய்க்கு கீழே சூட்கேசை புதைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுகிறார்.

பின்னர், காதலியின் பேஸ்புக் பக்கத்தில் நுழைந்து அவரது பேரிலேயே பொலிசாரை குழப்பும் விதத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆனால், சந்தேகம் அடைந்த காதலியின் பெற்றோர்கள் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

இந்த வேளையில், கால்வாய்க்கு அருகே புதைக்கப்பட்டிருந்த அந்த சூட்கேஸ் பெட்டியை அருகில் குடியிருப்பவர் கண்டுபிடித்து போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இந்த தகவலையும், சாலையில் கண்காணிப்பு கமெராவில் பதிந்திருந்த காட்சிகளையும் வைத்து காதலன் தான் கொலையாளி என்பதனை பொலிசார் உறுதி செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்றய தினம் நீதிமன்றத்திற்கு வந்தபோது, காதலியை கொடூரமாக சித்ரவதை செய்தது, மயங்கிய நிலையில் உள்ளபோது சூட்கேசில் அடைத்து கொலை செய்தது, பொலிசாருக்கு தவறான தகவல்களை அளித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோத் மேன் (Moth man): யார் இந்த பூச்சி மனிதன்?
Next post வங்காளதேசத்தில் இமாம் சுட்டுக்கொலை: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது..!!