வங்காளதேசத்தில் இமாம் சுட்டுக்கொலை: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது..!!

Read Time:1 Minute, 35 Second

timthumbவங்காளதேசத்தில் போக்ரா மாவட்டம், ஷிப்கஞ்ச் பகுதியில் ஷியா பிரிவினரின் மசூதி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 70 வயதான இமாம் மொயாஸேம் உசேன் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

சன்னி பிரிவினர் பெரும்பான்மையாக வாழ்கிற வங்காளதேசத்தில் ஷியா பிரிவினர் சிறுபான்மையினராக உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை கொலை செய்து சூட்கேசில் மறைத்த காதலன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
Next post சடலமாக நீர்த் தேக்கத்தில் மிதந்த இளம் யுவதி – காதல் காரணமா?