லெபனான் மீது விடிய விடிய குண்டு வீச்சு: பொது மக்கள் 254 பேர் பலி

Read Time:2 Minute, 31 Second

Lepanan.Map1.jpgஇஸ்ரேல் ராணுவ வீரர்கள 2 பேரை லெபனானில் உள்ள ஹிஸ்டில்லா இயக்கத்தினர் கடத்திச் சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவத்தின் முப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இந்த தாக்குதல் நீடிக்கிறது. பெய்ரூட் நகர விமான நிலையம் ஏற்கனவே இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சில் தகர்க்கப்பட்டு விட்டது. நேற்று இரவு இஸ்ரேல் விமானங்கள் பெய்ரூட் நகரம் மீது மீண்டும் சரமாரி குண்டு வீசியது. கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்கள் மீது விடிய விடிய குண்டு வீசப்பட்டது. இதில் அந்த நகரங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன.

ஹகாக், சிடான் நகரங்கள் பற்றி எரிகின்றன. முக்கிய சாலைகள், தொழிற்சாலைகள், எண்ணை கிணறுகள், 45 பாலங்கள் தகர்க்கப்பட்டன. இன்று காலை இஸ்ரேல் வீசிய 3 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததால் பெய்ரூட் நகரமே குலுங்கியது.

இஸ்ரேல் விமானங்கள் கடந்த ஒரு வாரமாக நடத்தி வரும் தாக்குதலில் லெபனானில் பொதுமக்கள் 254 பேர் பலியாகி விட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். லெபனானில் ஹிஸ்புல்பா இயக் கத்தினர் நடத்திய எதிர் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 25 வீரர்கள் பலியானார்கள்.

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீசுவதால் லெபனானில் இருந்து ஏராளமான வெளிநாட்டவர்கள் வெளியேறுகிறார் கள். அமெரிக்கா தனது நாட்டவர்களை அழைத்துக் கொண்டு வர 5 போர்க் கப்பல்களை மத்தியதரை கடல் பகுதியில் இருந்து லெபனானுக்கு அனுப்பி உள்ளது. லெபானில் 8 ஆயிரம்அமெரிக்கர்கள் உள்ளனர்.இதே போல லெபனானில் 12 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களை மீட்டு வர இந்தியா 4 கப்பல்களை அனுப்பி வைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தோனேசியாவை 2-வது முறையாக உலுக்கி எடுத்த சுனாமி உயிரிழந்தோர் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது
Next post சுனாமி பலி 525 ஆக உயர்வு: கடற்கரையில் தோண்ட, தோண்ட பிணங்கள்