உலகின் மிக வசீகரமான ஆணாக தெரிவான நடிகர் உருக்குலைந்த தோற்றத்தில்…!!

Read Time:1 Minute, 54 Second

13491CUayIA8UwAIKVFMஹொலிவூட் நடிகர் கிறிஸ் ஹேம்ஸ்வேர்த் உலகின் மிக வசீ­க­ர­மான ஆணாகத் தெரி­வு­செய்­யப்­பட்ட ஒருவர்.

ஆனால் தான் தற்­போது நடித்­து­வரும் “ஹார்ட் ஒவ் தி சீ” எனும் திரைப்­ப­டத்­துக்­காக மிகவும் உருக்­கு­லைந்து போயுள்ளார் அவர்.

32 வய­தான கிறிஸ் ஹேம்ஸ்வேர்த் அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்­தவர்.

தோர், எவேஞ்சர்ஸ், ஏஜ் ஒவ் அல்ட்ரோன் உட்­பட பல திரைப்­ப­டங்­களில் நடித்து புகழ்­பெற்­றவர் இவர்.

ஸ்பானிய நடிகை எல்ஸா பட்­டாக்­கியை 2010 ஆம் ஆண்டு திரு­மணம் செய்த கிறிஸ் ஹம்ஸ்வேர்த் 3 குழந்­தை­களின் தந்­தை­யாவார்.

2014 ஆம் ஆண்டு பீப்பள் சஞ்­சி­கை­யினால் உலகின் மிக வசீ­க­ர­மான ஆணாக அவர் தெரி­வு­ செய்­யப்­பட்­டி­ருந்தார்.

தற்­போது “ஹார்ட் ஒவ் தி சீ” படத்தில் பசுபிக் சமுத்­தி­ரத்தில் 90 நாட்கள் நிர்க்­க­தி­யாக தவிக்கும் ஒரு நப­ராக அவர் நடிக்­கிறார்.

இந்­நி­லையில், ஷேர்ட் அணி­யாத நிலையில் தான் பிடித்­துக்­கொண்ட புகைப்­ப­ட­மொன்றை டுவிட்­டரில் அவர் வெளி­யிட்­டுள்ளார்.

நீண்ட தாடி, மெலிந்த தோற்­றத்­துடன் அடை­யாளம் காணப்­பட முடி­யாத வகையில் இப்­பு­கைப்­ப­டத்தில் கிறிஸ் ஹேம்ஸ்வேர்த் காணப்­ப­டு­கிறார்.

ரொன் ஹோவார்ட் இயக்கும் இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் கறுப்பாக இருப்பதாக புகார்; கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பம்..!!
Next post அழகுராணி போட்டியில் சிறைக்கைதிகள்…!!