நெஃபர்டிட்டியின் மம்மி..!!

Read Time:1 Minute, 31 Second

timthumbஎகிப்தின் புகழ்பெற்ற மகாராணியான நெஃபர்டிட்டியின் மம்மி வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மண்டபம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் எகிப்தியவியலாளரான நிக்கலஸ் ரீவ்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கி.மு 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி நெஃபர்டிட்டி, மர்மமான முறையில் மரணித்ததுடன், அவரது மம்மி வைக்கப்பட்ட இடம் குறித்த தகவலும் அவரது விரோதிகளால் அழிக்கப்பட்டது.

இதனை அடுத்து நீண்டகாலமாக அவரது மம்மி தேடப்பட்டு வந்த போதும், இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது, நெஃபர்டிட்டியின் மகன் என்று கருதப்படும் இளம் மன்னர் டுட்டான்காமுனின் கல்லறையில், இரகசிய மண்டபங்கள் இருக்கின்றமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

அவ்வாறான அறை ஒன்றில் நெஃபர்டிட்டியின் மம்மியும் வைக்கப்பட்டிருக்கலாம் நம்புவதாகவும், இதற்கு 90 சதவீதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரித்தானிய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர் பலி..!! (வீடியோ)
Next post போர்விமானம் சுடப்பட்ட விவகாரம்: ரஷியா மிரட்டலுக்கு துருக்கி அதிபர் வருத்தம் தெரிவித்தார்…!!