சுனாமி பலி 525 ஆக உயர்வு: கடற்கரையில் தோண்ட, தோண்ட பிணங்கள்

Read Time:2 Minute, 43 Second

indonesia.jpgஇந்தோனேஷியாவின் ஜாவா தீவு அருகே கடந்த திங்கட்கிழமை மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கட லுக்கு அடியில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக் கத்தால் `சுனாமி’ பேரலை கள் உருவாகி கடற்கரை யோர கிராமங்களை பதம் பார்த்தது. ராட்சத அலைகள் கடற்கரை ஓரத்தில் உள்ள ஏராளமான வீடு கள், ஓட்டல்கள், சுற்றுலா விடுதிகளை தரைமட்டமாக்கியது. ஏராளமானவர்கள் மண்ணில் புதைந்தும், கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டும் இடிபாடு களில் சிக்கியும் பலியானார்கள்.

ஏராளமான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்து விட்டன. இந்த சுனாமி பேரலைகளால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்து விட்டது.இன்னும் 280-க்கும் மேற் பட்டவர்களை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே தெரியவில்லை.

54 ஆயிரத்துக்கும் மேற்பட் டவர்கள் வீடு வாசல்களை இழந்து நிர்க்கதியாக தவிக்கி றார்கள். பலியானவர்களில் வெளி நாட்டு சுற்றுலா பயணி களும் அடங்குவர். மீட்பு பணியில் ராணுவம் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகி றார்கள்.

கடற்கரை மணலிலும், இடிபாடுகளிலும் புதைந்து கிடக்கும் உடல்களை ராணுவத் தினர் மீட்டு வருகிறார்கள். தோண்ட தோண்ட உடல்கள் வந்த வண்ணம் உள்ளது. இது தவிர பெரிய மரங்களின் கிளைகளிலும் உடல்கள் தொங்கிய வண்ணம் கிடக் கிறது. எனவே பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக் கும். பலியானவர்களின் உடல்களை தேடி உறவினர்கள் அங்கும் இங்கும் அலைவது பரிதாபமாக உள்ளது.

இந்தோனேஷியாவை சுனாமி தாக்கப்போவதை 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஹவாயில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையமும், ஜப்பானில் உள்ள புவியியல் துறையும் கண்டுபிடித்து முன் அறிவிப்பு கொடுத்தது. ஆனால் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று இந்தோ னேஷிய அரசு மீது புகார் கூறப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லெபனான் மீது விடிய விடிய குண்டு வீச்சு: பொது மக்கள் 254 பேர் பலி
Next post மருதனார்மடத்தில் கிளைமோர் தாக்குதல்: 3 இராணுவம் பலி- 14 பேர் படுகாயம்