சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது ஜெர்மனியும் தாக்குதல்: 1200 ராணுவ வீரர்களை அனுப்புகிறது…!!

Read Time:2 Minute, 19 Second

637de2a5-8af8-4b59-930f-376797c9b86b_S_secvpfசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியும், 1,200 வீரர்களை அனுப்புகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்று குவித்தனர். மேலும் அதில் 352 பேர் காயம் அடைந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அதைத் தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியத்தை ஒடுக்க அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்த உறுதிபூண்டுள்ளன.

இதற்கிடையே பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேயுடன் தொடர்பு கொண்டு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பேசினார். அப்போது பிரான்சுடன் இணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க உதவி செய்வதாக உறுதி அளித்தார்.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கி விட்டன. ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் சிரியாவுக்கு. 1200 ராணுவ வீரர்களை அனுப்ப ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. அவர்கள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்களில் பணிபுரிவார்கள்.

இதற்காக பாராளுமன்றத்தில் அனுமதி பெற பிரதமர் ஏஞ்சலா மெர்கல் காத்திருக்கிறார். ஏனெனில் ஜெர்மனி மக்கள் அமைதி நடவடிக்கைக்குதான் வெளி நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்ப ஒத்துக் கொள்வார்கள். எனவேதான் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த பிரான்சுக்கு உதவுவதற்காக கடந்த வாரம் ஜெர்மனி ‘ஜெட்’ விமானங்களை வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது மகனை கடித்து விட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்த ராஜ நாகத்தை விரட்டி பிடித்து தரையில் அடித்து கொன்ற பாசக்கார தந்தை வீடியோ..!!
Next post பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த இளைஞன் சாவு..!!