முதலிரவை பாலுடன் தொடங்குவது ஏன்?

Read Time:4 Minute, 12 Second

milk-500x500ஆரம்பக்கட்ட திரைப்படத்தில் இருந்து இன்று வரை முதலிரவு காட்சி என்றாலே பால் சொம்புடன் அறைக்குள் நுழைந்து உள்ள வரும் மிட் ஷாட்டில் ஆரம்பித்து, படுக்கை அருகே வைக்கபட்டிருக்கும் பழங்களில் க்ளோஸ் அப் ஷாட் வைத்து முடித்து விடுவார்கள். முதலிரவு என்றாலே பால் சொம்புஅவ்வளவு முக்கியமா என்ன? என்ற கேள்வி சிலருக்கு தோன்றலாம்.

நமது நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்கு, சம்பிரதாயம் என பலவன இருக்கின்றன. இதில் ஒன்று தாம் சாந்தி முகூர்த்தம் என கூறப்படும் முதலிரவு. திருமணம் முடிந்த முதல் நாள் அல்லது, ஓர் நல்ல நாள் பார்த்து தம்பதிகள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை துவக்க இந்த சடங்கு பின்பற்றப்படுகிறது. இதை ஏன் பால் சொம்புடன் துவக்குகிறார்கள் என இனிக் காண்போம்….

மங்களகரமான செயல்

இந்துக்கள் சடங்கு முறைகளில் பால் அருந்துவது என்பது புனிதமாக காணப்படுகிறது. இது, உடலை சுத்தப்படுத்த உதவும் ஓர் கருவியாக கருதப்பட்டு வருகிறது. இல்லற வாழ்க்கையை துவக்கும் இடமாக விளங்கும் முதலிரவன்று பால் அருந்தி துவங்குவதால், அந்த வாழ்க்கை தூய்மையாக துவங்குகிறது என்று கருதி வந்துள்ளனர்.

அதிர்ஷ்டம்

ஆதி கால மக்கள் செய்த முதல் தொழில் விவசாயம். இது தான் அனைவரின் வாழ்வாதாரமாக விளங்கி வந்தது. விவசாயத்திற்கு உதவும் பசுவை கடவுள் போல கருதினர். சாணம், கிருமிநாசினியாகவும், பால் பொருட்கள் உடலுக்கு வலிமை தந்து, அதன் மூலம் செல்வம் ஈட்டவும் வழிவகுத்தது. எனவே, பசுவும் அதன் மூலம் கிடைக்கும் பாலும் அதிர்ஷ்டம் என நம்பினார். எனவே, பால் அருந்தி இல்வாழ்க்கையை துவக்குவதால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும் என்ற எண்ணமும் நிலவி வந்தது.

உடலுக்கு புத்துணர்ச்சி

உடல் அசதியாக இருக்கும் தம்பதிகளின் உடலை புத்துணர்ச்சி அடைய உதவும் பானம் பால். இது உடலில் உள்ள சோர்வை போக்கி சுறுசுறுப்பை தரும். மற்றும் பாலில் இருக்கும் டிரிப்டோபென் (Trytophan) எனப்படும் அமினோ அமிலம் உடலை இலகுவாக உணர உதவுமாம். இதற்காகவும் கூட பால் அருந்தி வருவது முதலிரவு வழக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

பாலுணர்வை தூண்டும்

குங்குமப்பூ, மஞ்சள் போன்றவை கலந்து பாலை பருகுவது பாலுணர்வை தூண்ட உதவுகிறது. இதனால், தாம்பத்தியம் சிறக்கும் என்பதாலும் முதலிரவில் பால் பருகுவது வழக்கமாக பின்பற்றுப்பட்டுள்ளது.

அஸ்வகந்தா

மேலும் அக்காலத்தில் பாலில் அஸ்வகந்தா கலந்து குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. அபூர்வ இந்திய மூலிகைகளில் ஒன்றான அஸ்வகந்தா உடலுறவு வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது ஆகும்.

உடல் சூடு

மேலும், பால் பருகுவதால், உடல் சூடு குறைகிறது. நம் நாடு மட்டுமின்றி, சில வெளிநாடுகளிலும் திருமணமான புதுமண தம்பதிகள் முதல் ஒருசில மாதங்களுக்கு பால் பருக வேண்டும் என்பதை வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கில் 5ம் திகதி விஷேட பாடசாலை நாள்…!!
Next post ரயில்களின் மிதிபலகையில் பயணிப்பதற்கு இன்று முதல் தடை…!!