நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இருக்கும் வியக்கவைக்கும் விஷயங்கள்…!!

Read Time:2 Minute, 58 Second

28-1448704293-1someinterestingfoodsfactsthatwillastonishyouஉணவு என்பது அனைத்து உயிரினத்தின் அடிப்படை தேவை. இதில், ரசித்து, ருசித்து உண்ணும் பழக்கம் கொண்ட ஒரே உயிரினம் மனிதர்கள் தான். நாம் அன்றாடம் சாப்பிடும் ஒவ்வொரு உணவின் பின்னணியிலும் சுவாரஸ்யமான, வியக்க வைக்கும் தகவல்கள் புதைந்துள்ளன.

நாம் சாப்பிடும் சில உணவுகள் நாற்பது வருடங்கள் முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் நிறைய மாறி இருக்கிறது. சில உணவுகள் நூற்றாண்டுகள் தாண்டியும் கெடாமல் இருக்கும் தன்மைக் கொண்டுள்ளன…..

கோழியின் கொழுப்பு

நாற்பது வருடங்களுக்கு முன்பு கோழியில் இருந்த கொழுப்பை விட, 266% இப்போது நாம் உண்ணும் கோழியில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இது உடல்பருமன் மற்றும் இதய பாதிப்புகள் அதிகமாக காரணமாக விளங்குகிறது.

கேரட்

கேரட் ஆரஞ்சு நிறம் என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கேரட் உண்மையில் ஊதா நிறமாகும்.
தேன்

என்றும் கெடாத உணவு ஒன்று இருக்கிறது எனில் அது தேன் தான். தேன் 3000 ஆண்டுகளுக்கு மேலும் கெடாமல் இருக்கும்.

பீனட் பட்டர் (Peanut Butter)

அறிவியல் அறிஞர்கள் பீனட் பட்டரை வைரமாக மாற்ற முடியும் என எப்போதோ கண்டறிந்துவிட்டனர்.

தாய்பால்

உலகிலேயே மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் தரக்கூடிய ஒரே உணவு தாய்பால் தான். அதனால் தான் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.

விமான உணவுகள்

விமானத்தில் உணவு சாப்பிடும் போது அவற்றை முழுமையாக சுவைக்க முடியாது. ஏனெனில், அந்த உயரத்தில் நமது ருசி அறியும் திறன் மற்றும் நுகரும் திறன் 20% – 50% குறைந்துவிடுகிறது.

ஃபாஸ்ட்புட்

அன்றாடம் ஃபாஸ்ட்புட் உண்ணும் பழக்கம் இருந்தால், கல்லீரல் அழற்சி சீக்கிரமாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன..

பிடித்த உணவு பற்றிய எண்ணம்

உங்களுக்கு பிடித்த உணவை பற்றி எண்ணும் போது கூட டோபமைன் எனும் சூப்பர் ஹார்மோன் உடலில் சுரக்கிறது. இது உடலுறவை ஊக்குவிக்கும் சுரப்பியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில்களின் மிதிபலகையில் பயணிப்பதற்கு இன்று முதல் தடை…!!
Next post மனித உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட இதயம் துடிப்பதை நீங்கள் பார்த்ததுண்டா..!!