தொடர் மழையால் தீவாக மாறிய கடலூர் நகரம்..!!

Read Time:2 Minute, 20 Second

timthumbகடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில் இருந்து பெய்த கன மழையால் கடலூர் மாவட்டமே வெள்ளக்கடாக மாறியது. நிவாரண பணிகள் மேற்கொள்ளப் பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த நிலையில் கடந்த 3 நாட்ளாக கடலூர் மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடலூர் நகரம் வெள்ளம் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது.

கடலூர் நகரில் அனைத்து தெருக்களிலும் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இன்று காலை ஓரளவு மழை ஓய்ந்திருந்தாலும் மழைநீர் வடிய வில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. பலர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கிக்போய் உள்ளனர்.

கடலூர் நகரில் பெரும்பாலான கடைகள் மூடியே கிடக்கிறது. கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையால் கெடிலம் ஆறு, தென்பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழையால் ப£திப்புக்குள்ளானவர்களை மீட்டு தங்க வைக்க 100க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகள் உடையாமல் தடுக்க ஏரிகளை சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டன் ரயிலில் பய­ணித்த பெண்­ணுக்கு “பரு­ம­னா­ன­வர்­களை வெறுக்கும் நபர்­களின்” அட்டை; பிரித்­தா­னிய பொலி­ஸாரின் விசா­ரணை ஆரம்பம்…!!
Next post எம்.எச் 370 விமானத்தின் தேடுதல் பணி முடிவுக்கு..!!