பாட்டில் ஆடையில் பளீர் புன்னகை
Read Time:1 Minute, 0 Second
பாட்டில் ஆடையில் பளீர் புன்னகை சிந்துபவர் இந்தோனேசிய மாடல். முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பாட்டில் ஆன உடையில், உலகை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற செய்தியையும் சொல்கிறார் இந்த அழகு பதுமை. அதாவது பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாதாம். பாலி தீவில் குடாவில் நடைபெற்ற பேஷன் ஷோவில் இவர் பங்கேற்றார். இந்த பேஷன் ஷோவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வடிவமைப்புக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் இவரை போல ஏராளமான மாடல்கள் சுற்றுச்சூழல் காக்க வேண்டியதன் அவசியத்தை கவர்ச்சிகரமாக வலியுறுத்தினர்.